Show all

பா.ம.க. மாநில மாநாடு நடத்த, நீதிமன்ற அனுமதிக்காக காத்திருக்கிறோம்

பா.ம.க. மாநில மாநாடு நடத்த, நீதிமன்ற அனுமதிக்காக காத்திருக்கிறோம் என தருமபுரி மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

 

இதுகுறித்து, அவர் புதன்கிழமை தருமபுரியில் செய்தியாளர்களிடம் கூறியது:

பாட்டாளி மக்கள் கட்சி மாநில மாநாடு வரும் பிப்.14-ஆம் தேதி வண்டலூரில் நடத்தத் திட்டமிட்டு கடந்த 6 மாதங்களாக மாநாட்டுப் பணிகள் மேற்கொண்டு வருகிறோம். மாநாடு நடத்த கடந்த ஜன.29-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்றோம்.

 

இந்தநிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன் தமிழக அரசு சார்பில் மாநாட்டு அனுமதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

 

இந்த மனுவை புதன்கிழமை (பிப்.10) விசாரித்த நீதிபதிகள், வருகிற 12-ஆம் தேதி வரை மாநாட்டுப் பணிகள் மேற்கொள்ளத் தடை விதித்துள்ளனர். ஏற்கெனவே, இதே இடத்தில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்ற பொதுக் கூட்டம் மற்றும் வணிகர் சங்க பொதுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் எதிர்க்காமல், தற்போது வேண்டும் என்றே திட்டமிட்டு தடை கோரி வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இது அரசியல் கட்சிகளின் ஜனநாயகக் கடமையைத் தடுக்கும் செயலாகும். மாநாடு நடத்த நாங்கள் நீதிமன்ற உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம். மாநாடு உறுதியாக நடக்கும்.

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.