Show all

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கலாமாம் சென்னை உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக்கிளை

தமிழகத்தில் ஒவ்வோர் மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகள் தொடங்கலாம் என சென்னை உயர் அறங்கூற்று மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க நடுவண் அரசின் வடபுல ஆட்சியாளர்கள் அறிவித்திருந்தனர். மற்ற மாநிலங்களில் ஹிந்தி பயிற்று மொழியாக உள்ளதால் இந்த திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

ஜெயக்குமார் தாமஸ் என்கிற நபர் பதிகை செய்த மனுவில்,

கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் (தமிழக அரசு பள்ளிகளில் கட்டணமே இல்லையே தம்பி) தரமான கல்வி (தரம் தரமின்மை என்பது ஆசிரியர்களின் ஈடுபாட்டைப் பொறுத்தது) வழங்க வேண்டும் என்ற நோக்கில் நடுவண் அரசால் 1986 ஆம் ஆண்டு ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன.

உண்டு உறைவிடப் பள்ளியான (குருகுலக் கல்;வி) நவோதயா பள்ளிகள் நடுவண் மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்குகிறது. 6ஆம் வகுப்பு முதல் பனிரண்டாம் வகுப்பு வரை இரு பாலரும் படிக்கும் பள்ளியாக உள்ளது. இப்பள்ளிகளில் 1.மாநில மொழி, 2.ஆங்கிலத்துடன் இந்தி பயிற்று மொழியாகக் கற்பிக்கப்படுகிறது.

ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. ஆனால் தமிழக அரசு இந்த பள்ளிகள் தொடங்க ஒத்துழைப்பு வழங்கவில்லை.

எனவே தமிழகத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்க உத்தரவிட வேண்டும்

என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க நடுவண் அரசு அணியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு அறங்கூற்றுவர்கள் சசிதரன் மற்றும் சுவாமிநாதன் அமர்வு முன்பாக கடந்த 30 அன்று விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக தமிழக அரசின் பதிலை செப்டம்பர் 4 க்குள் தெரிவிக்க வேண்டும் என்று அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு கடந்த 4 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் (தமிழக அரசின் பொறுப்பின்மை) என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்ற அறங்கூற்றுமன்றம், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அனுமதிப்பது குறித்து தமிழக அரசின் கருத்தை செப்டம்பர் 11 க்குள் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

அதன்படி இந்த மனுவானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடுவண் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் அணியமான வழக்கறிஞர், தமிழகத்தில் தமிழை முதல்மொழியாக கற்பிக்க உறுதி அளிக்கப்பட்டது. (இந்தியாவில் தொடங்கும் நடுவண் அரசின் எந்தப் பள்ளியையும் இந்திய அரசமைப்புச் சட்டப்படி அந்;;;தந்;;;;த மாநில மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டே தொடங்க வேண்டும். ஆனால் வடபுல ஆட்சியாளர்கள் முதன் மொழியாக மட்டும் மாநில மொழியை வைத்து விட்டு ஹிந்தியை பயிற்று மொழியாக இந்தியா முழுவதும் நடை முறையில் வைத்துள்ளனர். தமிழை முதல்மொழியாக கற்பிக்க உறுதி அளிப்பதெல்லாம் தேவையேயில்லை; அதுதான் நடைமுறை. தமிழே பயிற்று மொழி என்கிற என்கிற உறுதிப்பாடு இல்லாத நிலையில் இது நடுவண் அரசின் வடபுல ஆட்சியாளர்களின் ஹிந்தி, மற்றும் குருகுல கல்வித் திணிப்பு முயற்சியே) தமிழகத்தில் ஒவ்வோர் மாவட்டத்திலும் பள்ளிகள் தொடங்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஒவ்வொரு பள்ளிக்கு 25 ஏக்கர் முதல் 30 ஏக்கர் வரை இடம் தேவைப்படுகிறது

என்றார்.

அறங்கூற்றுவர்கள் தமிழகத்தில் ஒவ்வோர் மாவட்டத்திலும் நடுவண் அரசு நவோதயா பள்ளியைத் தொடங்கலாம் என்று அனுமதி அளித்தனர்.

மேலும் நவோதயா பள்ளிக்குத் தேவையான இடத்தை வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் நவோதயா பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்க தமிழக அரசுக்கு அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டுள்ளனர். அது குறித்து தமிழக அரசு 8 கிழமைகளுக்குள் பதில் மனு பதிகை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.