Show all

நாட்டு மாடுகள் சல்லிக்கட்டில் மட்டுமல்ல தமிழ் சமுதாயத்திலும் பெற்றன வெற்றி

30,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாட்டு மாடுகள் குறைந்த அளவே பால் கொடுத்ததால், மக்கள் ஜெர்சி இன மாடுகளுக்கு மாறினர். ஆனால், இப்பொழுது காற்று நமது நாட்டு மாடுகளின் பக்கம் வீசுகின்றது. சல்லிக்கட்டு போராட்டத்தின் போது, நாட்டு மாடுகளின் பல நன்மைகள் வெளியே வந்தன. முதன்மையாக அவற்றின் பாலில் அ-2 புரதம் இருப்பதாகவும், அது ஜெர்சி மாட்டின் அ-1 புரதத்தை விட மிக சிறந்தந்து என்று மக்கள் அறிந்தார்கள்.

இதனால் அ-2 பாலின் விலை நாளுக்கு நாள் உயந்துகொண்டே செல்கிறது. தற்பொழுது, ஒரு லிட்டர் பாலின் விலை ரு 150 வரை போகிறதாம்! இந்த தேவையை நிறைவு செய்ய விவசாயிகள் நாட்டு மாடு வாங்கி வளர்க்க தொடங்கியுள்ளனர். இதனால் நாட்டு மாடுகளின் விலை ஒரு லட்சத்துக்கு மேல் உயர்ந்து விட்டது.

இந்த ஆண்டின் சல்லிக்கட்டு வெற்றியுடன் சேர்ந்து, இந்த செய்தியும் இரட்டை சர்க்கரை பொங்கலாய் தித்திக்கின்றது!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,696

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.