Show all

என் தேசம் என் உரிமை, என்ற பெயரில் புதிய கட்சியாம்

சல்லிக்கட்டுக்காக சென்னை மெரினாவில் போராடிய மாணவர்கள் இணைந்து புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளதாக ஊடகங்கள் தகவல்.

     அரும்பாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்தில், கட்சி தொடக்க விழா சனிக்கிழமை நடந்தது. இதற்காக சென்னை மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள் திரண்டு வந்தனர். தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை பார்ப்பவர்கள், வியாபாரத் துறையில் இருப்பவர்கள், பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

புதிய அரசியல் கட்சிக்கு,

என் தேசம் என் உரிமை கட்சி.

என்று பெயரிட்டுள்ளனர்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் எபினேசர், சத்யா, பிரவீணா, சுகன்யா, கார்த்தி, சுதந்திர தேவி, பிரகாஷ், பிரசாத் ஆகியோர் கட்சியின் பெயரை அறிவித்தனர்.

அதைத் தொடர்ந்து கட்சி கொடியையும் அறிமுகம் செய்தனர். தேசிய கொடியின் வண்ணமும், கொடியின் நடுவில் இளைஞர் ஒருவர் அடிமை சங்கிலியை உடைத்தது போன்ற படமும் இடம்பெற்றுள்ளது.

லஞ்சத்தை ஒழிப்போம், விவசாயத்தைக் காப்பாற்றுவோம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைக் குறிக்கோளாக கொண்டு தங்கள் கட்சி செயல்படும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேஸ் தெரிவித்தார்.

அதே போல் நெடுவாசல் கரிமச்சேர்மத் திட்டத்தை தடுத்து நிறுத்த போராடுவோம் என்றும், இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் எபினேஸ் தெரிவித்தார்.

மேலும்,

புதிய கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை தொடங்கியதும் பலர் ஆர்வத்துடன் வந்து சேர்ந்தனர். உறுப்பினராக சேருவதற்கு 10 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவத்தை நிறைவு செய்து கொடுக்க வேண்டும். நிர்வாகிகளாக வர விரும்புபவர்கள் அதற்காக ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.

     நிர்வாகிகளாக விரும்புபவர்களுக்கு தனி தேர்வு வைத்திருந்தனர். அதற்காக ஒரு பெரிய அரங்கில் 4 குழுவினர் அமர்ந்திருந்தனர். அந்த குழுவினர் நிர்வாகியாக விரும்பியவர்களிடம் கேள்வி கேட்டனர்.

1.

உங்கள் பகுதியில் நீங்கள் எந்த அளவுக்கு பிரபலம் ஆனவர்? 2.

ஊழல் அற்ற தமிழ்நாட்டை உருவாக்க செய்ய வேண்டிய பணிகள் என்ன?

3.

நமது கட்சியை நிலைப்படுத்தவும் பிரபலப்படுத்தவும் நீங்கள் சொல்லும் 5 வழிகள் என்ன?

4.

விவசாயிகள் நலனுக்காக நாம் என்ன செய்ய வேண்டும்?

5.

பெண்களின் பாதுகாப்பை உயர்த்துவதிலும், அதிகாரப் பகிர்விலும் உங்களது யோசனைகள் என்ன?

6.

இளைஞர்களின் வேலை வாய்ப்பை எவ்வாறு அதிகரிப்பது?

7.

இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரு சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றால் நீங்கள் எந்த சட்டத்தை மாற்றியமைப்பீர்கள்?

மேற்கண்ட 7 கேள்விகளுக்கும் அவர்கள் சொல்லும் பதிலை கணினிகளில் பதிவு செய்து கொண்டனர். இளைஞர்களின் எழுச்சி அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் தற்போது ஏற்பட்டுள்ளது.

என்றும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஆனால்,

ஊடகங்கள் வெளியிட்டுள்ள இந்தச் செய்திகள் அடிப்படையில், 

புதிய கட்சி தொடங்கியவர்களிடம், சல்லிக்கட்டு நடத்திட போராடியவர்களின் வாசனையை கொஞ்சமும் உணர முடியவில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.