Show all

சல்லிக்கட்டு வேண்டும்; இயற்கை எரிவாயுத் திட்டம் வேண்டாம். பாரம்பரியம் காக்கும் இளைஞர் போராட்டங்கள்

கடந்த மாதம் முழுவதும் சல்லிக்கட்டு வேண்டும் என வாடிவாசலுக்காக போராடிய தமிழக மக்கள், தற்போது இயற்கை எரிவாயுத் திட்டம் வேண்டாம் என நெடுவாசல் முன் தமிழகத்தை காக்க போராடி வருகின்றனர்.

     இந்தக் கரிமச்சேர்மத் திட்டத்துக்கு கர்நாடக பாஜக பாராளுமன்ற உறுப்பினர் மல்லிகார்ஜூனப்பா குடும்ப நிறுவனம்தான் காரணம் என தெரியவந்துள்ளது.

     கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜி மல்லிகர்ஜூனப்பா. கர்நாடகாவில் இவரது பெயர் ஜி.எம் என்றால் மிக பிரபலம். இவர் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர். பின்னர் பாஜக தொடங்கியபோது அதில் ஐக்கியமானவர்.

     இவர் ஜி.எம் குரூப்ஸ் நிறுவனங்களைத் தொடங்கினார். கல்வி, விவசாயம், வர்த்தகம், நிதி, வங்கி துறை, மின்சாரம், சர்க்கரை என இவர் தொடாத தொழில்களே இல்லை எனலாம்.

     இவர் இருமுறை பாராளுமன்ற உறுப்பினராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

     மல்லிகர்ஜுனப்பாவுக்கு மொத்தம் 3 மகன்கள் மற்றும் 4 மகள்கள். மூத்த மகன் ஜி.எம் சித்தேஸ்வரா, 2வது ஜி.எம் பிரசன்ன குமார், 3வது ஜி.எம் லிங்கராஜு.

     தற்போது சித்தேஸ்வராவும், லிங்கராஜுவும் தான் இந்த நெடுவாசல் பிரச்னையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

 

     சித்தேஸ்வரா பாஜகா பாராளுமன்ற உறுப்பினராக 3வது முறையாக இருந்து வருகிறார். இவர் தாவணகரே தொகுதி பாஜக பாராளுமன்ற உறுப்பினர்.

     ஜெம் நிறுவனத்தை பார்த்துக்கொள்ளும் பிரசன்ன குமார், லிங்கராஜுவுக்கு உறுதுணையாக உள்ளார்.

     இந்த லிங்கராஜூவின் ஜெம் நிறுவனம் தான் நெடுவாசலில் கரிமச்சேர்ம எரிவாயுவை விற்பனை செய்யும் உரிமம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் நாட்டிலேயே வேதிப்பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்களில் தலையாயது.

     ஜெம் நிறுவனம் தான் கரிமச்சேர்மத் திட்டத்துக்கு தலையாயது என இதுவரை தெரிந்திருந்தது. ஆனால் அதற்கு பின்புலமாக பாஜக உள்ளது என்;பது அப்பட்டமாக தெரியவந்துள்ளது. சித்தேஸ்வரா கடந்த ஆண்டு சூன் வரை மாநிலங்களுக்கான கனரக தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான நடுவண் அமைச்சராக இருந்தவர்.

     இவர் ஆர்.எஸ்.எஸ். பாஜக தலைவராக உள்ள சித்தேஸ்வராவுக்கு தொடர்புடைய நிறுவனம் என்பதால், பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமலும், இந்த திட்டத்துக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.