Show all

நடுவண் அரசின் உள்ளடி வேலைகள்! கீழடி அகழாய்வு குறித்தான தமிழர் தொன்மையை இருட்டடிப்பு செய்ய

20,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கீழடியில் கடந்த நான்கு ஆண்டுகள் நடந்த அகழாய்வுக்கு அமர்நாத்  ராமகிருஷ்ணன் தலைமையேற்றிருந்தார். தமிழர்களின் தொன்மையான பழங்கால நாகரீகம் குறித்து பல அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக, அந்த அகழ்வாய்வில், தகவல்கள் வெளியாகின. அந்த அகழாய்வு நடந்துகொண்டிருந்தபோதே, அமர்நாத் அசாமுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தற்போது கீழடி சமந்தமான எந்த வித அறிக்கையும் அமர்நாத் தயாரிக்கக்கூடாது என்று தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தொல்லியல் துறையின் இயக்குனர் வி.என்.பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவறிக்கையில், அசாமுக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட அமர்நாத், கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் அனைத்தையும் பெங்களூர் அலுவலகத்தில் உள்ள அலமாரியில் பூட்டி வைத்துவிட்டு சென்றதாகவும், மேலும், அது தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் தனக்கு தெரியாமல் எடுக்கப்படக்கூடாது என்று புதிதாக கீழடி அகழாய்வுக்கு பொறுப்பேற்ற அதிகாரியிடம் அமர்நாத் தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமர்நாத்தின் இந்த நடவடிக்கைகள் ஏற்புடையதல்ல என்றும். இனி கீழடி சமந்தமான அறிக்கையைப் புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரியே தயாரிப்பார் என்றும் தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. கீழடியில் கிடைத்த பொருட்கள் அமர்நாத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் , அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாமில் பணிபுரிந்து வரும் அமர்நாத்துக்கு, வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை, டெக்ஸாஸ் மாகாணத்தில் நடைபெறும் அந்த பேரவையின் 31-வது ஆண்டு கூட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தது.

இந்த கூட்டத்துக்கு செல்ல அமர்நாத்துக்கு நடுவண் அரசு அனுமதி மறுத்தது. இதற்கு கீழடி ஆய்வு குறித்தும், தமிழர்களின் தொன்மை நாகரிக வரலாறு குறித்தும், அமெரிக்க வாழ் தமிழர்களிடம் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசிவிடக்கூடாது என்ற வன்மத்தின் காரணமாகவே, நடுவண் அரசு அமர்நாத்துக்கு அனுமதி வழங்கவில்லை என தமிழ்;அறிஞர்கள் வருத்;;தத்தை பதிவு செய்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,932.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.