Show all

தமிழகத்திலும், குஜராத் பாரம்பரிய குடியரசு நாள் விழாவை அரங்கேற்றினார் ஆளுநர்

13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாடு முழுக்க 69வது குடியரசு நாள் கோலாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையிலும் மெரினாவில் இந்த விழா கொண்டாடப்பட்டது. ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றினார். இதற்காக மிகவும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதில் நடந்த அணி வகுப்பில் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். இந்த விழாவில் குஜராத் பாரம்பரியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்து இருக்கிறது.

இந்த விழாவில் தமிழக கலையான கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் போன்றவை இடம்பெற்று இருக்கிறது. அதேபோல் பறை இசையும் இடம்பிடித்துள்ளது. தமிழக பள்ளி மாணவர்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

இந்த விழாவில் கலந்து கொண்டு நடனம் ஆட குஜராத் பள்ளியில் இருந்து மாணவர்கள் வந்துள்ளனர். நேரடியாக கடைசியில் இவர்கள் விழாவில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் தேர்வில் எந்த விதமான அடிப்படை முறைகளும் கடைபிடிக்கப்படவில்லை. இதில் அவர்கள் குஜராத் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் நடனம் ஆடியுள்ளார். அதேபோல் குஜராத்தில் இருந்து மற்ற கிராமிய கலைஞர்களும் வந்துள்ளனர். இவர்கள அனைவரும் நேரடியாக உள்ளே நுழைக்கப்ட்டு இருக்கிறார்கள். இந்த நிகழ்வு அனைத்திற்கும் ஆளுநர் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. தற்போது இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே ஆளுநர் நடுவண் அரசின் திட்டமான, மக்களைக் கழிப்பிடம் கட்டி ஆய்போக வைப்பது என்பதை மட்டும் நடைமுறை படுத்தப் படுகிறதா என்று தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து கொண்டிருந்தார். தற்போது குடியரசுத் நாள் விழாவில் குஜராத் பாரம்பரியத்தை புகுத்தி உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

அதிமுகவும், திமுகவும், ஏனைய திராவிட இயக்கத்தவர்களும், பெரியார் அண்ணா காலத்தைப் போல் அல்லாமல் வீரியம் குன்றிப் போய் காணப்படுகிற நிலையில், பாஜக மீண்டும் தமிழகத்தில், மதவாத சாதிய பாகுபாடுகளைக் கட்டவிழ்த்து விட பற்பலமுனைகளில் காய் நகர்த்தி வருகிறது. அதில் ஒன்றுதான் ஆளுநரின் இந்த குஜராத் பாரம்பரியத் திணிப்பு. நோட்டாவிற்கு தருகிற மதிப்பைக் கூட இந்த பாஜக பம்மாத்துகளுக்கு தரமாட்டார்கள் தமிழக மக்கள் என்பதை பாராளுமன்றத் தேர்தலில் தாம் முழுமையாக உணரப் ;போகிறது பாஜக.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,679

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.