Show all

கருத்துக் கணிப்பில் ரஜினி தமிழக முதல்வராக 17 விழுக்காட்டினர் ஆதரவு: இந்தியா டுடே

03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக சட்டமன்றத்திற்கு தற்போதைய சூழலில் தேர்தல் நடந்தால் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்றும் அ.தி.மு.க. தோல்வியை தழுவும் என்றும் ரஜினிக்கு 16 விழுக்காடு ஓட்டுக்கள் கிடைக்கும் என்றும் இந்தியா டுடே நடத்திய பரபரப்பு கருத்து கணிப்பில் தெரியபடுத்தியுள்ளது.

இந்தியாடுடே-கார்வி இணைந்து 77 தொகுதிகளில் நடத்திய கருத்து கணிப்பில் கிடைத்த தகவலின்படி:

தற்போதைய அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என 40 விழுக்காட்டு பேர் கருத்து தெரிவித்துள்ளனராம் மேலும் அவருக்கு 16 விழுக்காடு ஓட்டு கிடைக்கும் எனவும், 33 தொகுதிகளை பிடிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஜினி முதல்வராக வேண்டும் என 17 விழுக்காடு பேர் விருப்பம் தெரிவித்துள்ளனராம். 34 விழுக்காடு பேர் ரஜினி அரசியலில் தோல்வி அடைவார் என்றும் 53 விழுக்காடு பேர் வெற்றி பெறுவார் என்றும், ரஜினி-கமல் இணைய வேண்டும் என 29 விழுக்காடு பேர் கூறியுள்ளனராம்.

ரஜினி யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற கேள்விக்கு , யாருடனும் சேர வேண்டாம் என 28 விழுக்காடு பேரும், திமுகவுடன் சேரலாம் என 21 விழுக்காடு பேரும், பாஜகவுடன் சேரலாம் என 20 விழுக்காடு பேரும், அதிமுகவுடன் சேரலாம் என 11 விழுக்காடு பேரும், காங்கிரசுடன் சேரலாம் என 2 விழுக்காடு பேரும் கருத்து தெரிவித்துள்ளனராம்.

அதே போன்று ஆளும் கட்சியான அ.தி.மு.க வரும் தேர்தலில் 26 விழுக்காடு ஓட்டுகளுடன் 68 தொகுதிகள் வரை பிடிக்கும் என்றும் எதிர்கட்சியான தி.மு.க. கூட்டணி 34 விழுக்காட்டு ஓட்டுக்களுடன் 130-க்கும் மேலான தொகுதிகளை வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் முதல்வராக வேண்டும் என்ற கேள்விக்கு ஸ்டாலின் முதல்வராக 50விழுக்காடு பேரும், ரஜினி முதல்வராக 17விழுக்காடு பேரும், பன்னீர் முதல்வராக வேண்டும் என 11விழுக்காடு பேரும், எடப்பாடியார் முதல்வராக, 5விழுக்காடு பேரும், கமல் முதல்வராக 4 விழுக்காடு பேரும், தினகரன் முதல்வராக 3விழுக்காடு பேரும் கருத்து தெரிவித்துள்ளனராம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,669

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.