Show all

சல்லிக்கட்டுத் தடைக் கெதிரான கௌவரமான போரட்டத்திற்கான வெற்றிக்கனி....

     தமிழக சல்லிக்கட்டுத் தடைக் கெதிரான போரட்டத்தால் கடந்த ஏழு நாட்கள் ஒன்பது மணி நேரமாக திமிறிக் கொண்டிருந்த ஒட்டு மொத்த தமிழகம், மனதில் குழப்பமான பாரங்களோடு இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறது.

     தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு என்று நாமக்கல் கவிஞர் பாடியது வெற்று சொற்கள் அல்ல; அனுபவித்ததின் வெளிப்பாடு.

     எப்போதுமே தமிழக மக்களுடைய சிந்தனை மிக தொலைநோக்குடைய ஒற்றை அறிஞன் சிந்தனை போல பிசிறு இல்லாமல் இருக்கும்.

அதை வரலாறு நெடுக நாம் உணர்ந்திருக்கின்றோமோ யில்லையோ? உலகமும் நமது பண்பாட்டு எதிரிகளும் தெளிவாக கணித்து வைத்திருக்கின்றார்கள்.

     நடந்து முடிந்த தமிழக சல்லிக்கட்டுத் தடைக் கெதிரான போரட்டமும், தொலைநோக்குடைய ஒற்றை அறிஞன் சிந்தனை போல பிசிறு இல்லாமல் தான் நடந்தது.

     அதற்கான வெற்றிக்கனியை தருவதில் தான் நமது பண்பாட்டு எதிரிகள்,

தலைமை இல்லாத போராட்டம் என்பதால் வேறு வன்முறைக் குழுக்களை உள்ளே நுழைய விட்டுவிட்டார்கள்.

போராட்டத்தைத் தொடங்கத் தெரிந்தவர்களுக்கு முடிக்கத் தெரியவில்லை.

என்றெல்லாம் கதைகட்டி விடுவதற்காக குண்டாந்தடியோடு காவலர்களை ஏவி, நள்ளிரவே தேவையான சல்லிக் கற்களை இறக்கி, அறவழி;ப் போராளிகள் தங்கள் மீது கல்லெறியத் தோதாக அவர்கள் மீது காவலர்களைக் கல்லெறியச் செய்து, காவலர்களையே கொளுத்தல் வேலைகளை எல்லாம் செய்ய வைத்து

கௌரவமாக ஏழு நாட்களாக நடத்தப் பட்ட தமிழக சல்லிக்கட்டுத் தடைக் கெதிரான அறவழிப் போராட்டத்திற்குரிய வெற்றிக்;;; கனியை, தமிழர்கள் அப்படியெல்லாம் கௌரமானவர்கள் இல்லை என்று நிரூபிப்பதற்காக, அரசியல்வாதிகளின் பதவி ஆசையைப் பகடைக் காயாக்கி கேவலமாக நடத்தி வெற்றிக்கனியை பிச்சை போடுவதைப் போல் தந்திருக்கிறார்கள்.

     நமது கிராமப் புறங்களில், செருப்பாலடித்து கருப்பட்டி கொடுப்பது என்று ஒரு சொலவடை செல்லுவார்கள்.

இங்கே கருப்பட்டி கல்லடியும் தடியடியும் கொடுத்து வீசப்பட்டிருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.