Show all

காவிரி பங்கீட்டில் தமிழகத்திற்கு, வரலாறு நெடுக்க, தொடர் இறங்குமுகம்

06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் பொன்னியாற்றுக்குக் காவிரி என்றும் பெயர்.

பொன்படு நெடுவரையில் தோன்றிப் பாய்வதால் காவிரியாற்றுக்குப் பொன்னி என்றும் பெயர்.

காவிரியின் அகவை கணக்கிட முடியாத பல கோடி ஆண்டுகள்.

காவிரி, பொன்படு நெடுவரை என்கிற தமிழகத்திற்கு சொந்தமான மலையில் தோன்றி தமிழகத்திற்குச் சொந்தமான குமரிக்கடலில் கலக்கிறது.

முப்புறம் கடல் சூழ்ந்த நாடு தமிழ்நாடு. அந்தக் கடல் குமரிக்கடல் அவ்வளவுதான். அந்தக் கடலில் அமைந்த துறைமுகங்களுக்கு தாம் வெவ்வேறு பெயர்கள்.

2029 ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னன் கரிகாலனால் காவிரியில் கட்டப்பட்ட முதல் அணைக்கட்டு கல்லணை. உலகின் முதல் அணைக்கட்டும் அதுதான்.

பல்லாயிரம் ஆண்டுகளாக கடந்த 900 ஆண்டுகளுக்கு முன்னர் வரை காவிரி தொடங்கி முடியும் முழுபகுதியும் தமிழர்களுடையதாக இருந்த நிலையில், தமிழர் காவிரி நீர் பயன்பாட்டிற்கு எந்தச் சிக்கலும் எழவில்லை.

900 ஆண்டுகளுக்கு முன்னம் காவிரி தொடங்குமிடத்தில் தோற்றுவிக்கப்பட்ட கன்னட அரசு, முதன் முதலாக காவிரியைத் தடுத்து அணைகட்டி அன்றே தமிழர்களுக்கு சோதனை ஏற்படுத்த, அணை என்று சிறு சிறு தடுப்புகளை ஏற்படுத்தி காவிரியின் திசையை மாற்ற முனைந்தது.

இரண்டாம் இராசராசசோழன் பெரும் படையுடன் சென்று தடுப்புகளை தகர்த்தெறிந்து காவிரியை மட்டும் மீட்டார். காவிரி தொடங்கும் இடத்தை கைப்பற்றாமல் விட்டதுதான் பிழை.

அண்மைக் காலத்தில் 378.40 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகாவிடம் இருந்து பெற்று வந்த தமிழகம், அதை உறுதி செய்ய கோரிக்கை விடுத்து, காவிரி தீர்ப்பாயத்தை நாட, தமிழ்தொடர்ஆண்டு-5092ல் (1991)காவிரி தீர்ப்பாயம் கொடுத்த இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்தின் பங்கு 205 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டது.

205 டி.எம்.சி. என்பது நிச்சயம் போதாது எனச்சொல்லி முறையிட தமிழ்தொடர்ஆண்டு-5108ல் (2007) வந்த காவிரி தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, 192 டி.எம்.சி.தான் தமிழகத்துக்கு என்றது.

192 டி.எம்.சி. ஒதுக்குவது என்பது நியாயமற்றது என உச்சஅறங்கூற்றுமன்றத்தை நாட, இன்னும் 14.75 டி.எம்.சி.யை குறைத்து, தமிழகத்துக்காக பங்கீடு 177.25 டி.எம்.சி. தான் என்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,702

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.