Show all

எச்.ராஜா கொடுக்கிறார்; நெல்லையம்மாளுக்கு வீரஹிந்துத்துவாச்சி விருது! அய்யாக்கண்ணுவை அறைந்தமைக்கு

25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து சென்னை கோட்டை நோக்கி விழிப்புணர்வு கருத்துப் பரப்புதல் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் உழவர்கள், பொதுமக்களிடம் துண்டறிக்கைகளை வழங்கிய போது, திருச்செந்தூரை சேர்ந்த பா.ஜ.க. மகளிரணி நிர்வாகி நெல்லையம்மாள் கோயில் வளாகத்தில் துண்டறிக்கை கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். உழவர்கள் துண்டறிக்கை குறித்து விளக்கம் அளிக்க முயன்ற போது, தெரியுண்டா உங்களைப் பற்றி என்று மரியாதை குறைவாகப் பேசி, திடீரென்று அய்யாக்கண்ணுவின் கன்னத்தில் அறைந்ததாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளைப் பயன்படுத்தக்கூடாது, நஞ்சற்ற உணவு உற்பத்தி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த ஒன்பது நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் இருந்து விழிப்புணர்வு கருத்துப்பரப்புதல் பயணத்தை தொடங்கினோம்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து நூறாவது நாளில் சென்னையில் நிறைவு செய்கிறோம். செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வழங்கி வருகிறோம். திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பக்தர்கள், பொது மக்களுக்கு துண்டறிக்கைகளை வழங்கினோம்.

அப்போது பா.ஜ.க. மகளிரணி நிர்வாகி நெல்லையம்மாள் எங்களிடம் துண்டறிக்கைகளைக் கொடுக்கக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எங்கள் கோரிக்கைகளை விளக்கி புரிய வைத்த போது, அவர் திடீரென கன்னத்தில் அறைந்தார். இயேசு ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அது போல் நானும் மறு கன்னத்தை காட்டினேன். ஆனால் அவர் என்னிடம் செருப்பை கழற்றி காண்பித்தார்.

பா.ஜ.க.வினரின் தூண்டுதலால் சில இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. நடுவண்அரசில் ஆளும் பாரதிய ஜனதா ஆட்சியில் உழவர்களின்  கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தலைமை அமைச்சர் மோடி எங்கள் வயிற்றில் அடித்தார். தற்போது பா.ஜ.க. நிர்வாகி கன்னத்தில் அடிக்கிறார். என்றார் வருத்தத்தோடு. 

அய்யாக்கண்ணுவை, தாக்கிய பெண்ணுக்கு வீர தமிழச்சி விருது கொடுப்போம் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது கீச்சுப் பதிவில் வெளியிட்டுள்ளார். 

இதை அவரே சுய நினைவுடன் பதிவு செய்ததாக எந்த உறுதிமொழியும் கூறவில்லை. 

நாளை  புதியதாக பொறுப்பில் அமர்த்தப் பட்டுள்ள நிருவாகி தவறுதாலாகப் பதிவு போட்டுவிட்டார் என்றும் சொல்லக் கூடும்.

‘பொய்யும் புனைச்சுருட்டும் தன் ஆயுதமாகக் கொண்டு மலிவு விளம்பரம் தேடும் அய்யாக்கண்ணு நேற்றைய தினம் திருச்செந்தூரில் இழிந்த வார்த்தைகளை உபயோகித்து நெல்லையம்மாள் அவர்களை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அவருக்கு தக்க பதிலடி கொடுத்த நெல்லையம்மாள் அவர்களுக்கு வீர தமிழச்சி விருது வழங்குவோம்’ 

இவ்வாறு கீச்சுவில் அவர் பதிவு உள்ளது.

அது எதற்கு விரத்தமிழச்சி! ஹிந்தி, ஹிந்துத்துவா, ஹிந்துஸ்தானம் என்ற தலைப்பிலான தமிழர் விரோத சக்திகளுக்கு தமிழகத்தில் தளம் அமைத்துக் கொடுப்பது தானே அவர் எடுத்துக் கொண்ட பொறுப்பு! வீர ஹிந்திச்சி, வீர ஹிந்துத்வாச்சி, வீர ஹிந்துஸ்தானிச்சி என்று விருது கொடுங்களேன். 

எச்.ராஜா பிறந்தது என்னவோ தஞ்சாவூர் அருகே அமைந்திருக்கும் மிலட்டூர் கிராமத்தில். 

சர்ச்சை நாயகன் எச் ராஜாவின் முழுப்பெயர் ஹரிஹர ராஜா ஷர்மா என்பதாகும். ஹரிஹரன் என்பது எச். ராஜாவின் தகப்பானார் பெயராகும். எச். ராஜா தமிழகத்தில் பிறந்து தமிழ் நான்றாகக் கற்றவர் என்றாலும் பிறப்பால் அவர் வடஇந்திய ஷர்மா இனத்தைச் சார்ந்தவர். இராஷ்டிரிய ஸ்வம்ஷேவக் ஷங்கில் இளம் அகவையிலிருந்தே மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தமிழ் நன்றாகப் பேசத்தெரிந்ததால் அவர் வாழ்நாள் முழுவதும் தமிழர் உள்ளடி வேலைகளிலேயே சிறப்பாக ஈடுபட்டு வருகிறார்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,721.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.