Show all

முன்பு நச் வசனங்கள் பேசி கோட்டை விட்டவர்தான் அப்பா! இப்போது மகர்! காகிதப் பூக்கள் மணக்காதாம்

09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக அரசியலில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலர்ந்தாலும், அவை மணக்காது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

அண்ணா அறிவாலயத்தில் இதுவரை 22 மாநகர் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைச் சந்தித்து கள ஆய்வு நடத்தியுள்ளேன். இது சந்திப்பு என்பதைவிட உணர்வுகளின் சங்கமம் என்பதே பொருத்தமானதாகும். குழுப் பூசலை விட்டு, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் திமுக பெரிய வெற்றிபெறும் என்று நிர்வாகிகள் அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

இது குடும்பக் கட்சிதான்: திமுகவை குடும்பக் கட்சி என்று வெளியில் இருந்து விமர்சனம் செய்வர். அதற்கு, இது குடும்பக் கட்சிதான். பல லட்சம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பாடுபடும் கட்சிதான் என்று நெஞ்சம் நிமிரக் கூறி வருகிறோம்.

அண்ணாவும், கருணாநிதியும் வளர்த்துள்ள இந்தக் கொள்கை உணர்வுமிக்க குடும்பப் பாசம் உள்ளவரை திமுக எனும் பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. 

‘பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும். பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காது’

திமுக என்பது ஆயிரங்காலத்துப் பயிர். தமிழ் மொழிப் பெருமைக்கும், தமிழ் மக்களின் உரிமைக்கும் உணவூட்டும் ஜீவாதாரப் பயிர் இது. அந்தப் பயிரைப் பாதுகாக்கும் வேலியாக உள்ள திமுகவின் தொண்டர்களை நேரில் சந்தித்து அவர்களின் மனக்குமுறலைக் கேட்டு வருகிறேன். திமுக வெற்றிபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்படும் என்றார்.

எம்ஜியார் கிளர்ந்தெழுந்த போது, இப்;படித் தான் கருணாநிதி தெனாவெட்டாக நச் வசனங்கள் பேசி கோட்டை விட்ட தமிழகத்தை செயலலிதா வரவு வரை மீட்கவே முடியவில்லை. கமல் மிகப் பெரிய சக்தியாக வளர்ந்து விட உங்கள் நச் வசனங்களை உரமாக்கி விடாதீர்கள் மகர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,705 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.