Show all

இரட்டை இலைச் சின்னத்திற்கான கையூட்டுப் புகாரில் டிடிவி தினகரன் நள்ளிரவில் கைது

இரட்டை இலைச் சின்னத்திற்கான கையூட்டுப் புகாரில்  டிடிவி தினகரனை டெல்லி காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்தனர். நான்கு நாட்கள் தொடர் விசாரணைக்குப் பிறகு டெல்லி காவல்துறையினர், நள்ளிரவில் டிடிவி தினகரனையும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் கைது செய்துள்ளனர்.

     அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்துக்கு போட்டி போட்டதால் தேர்தல் ஆணையம் இரட்டை இலையை முடக்கியது. இதுதொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்தது.

     இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு கையூட்டு  கொடுக்க பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரா என்ற இடைத்தரகர் மூலம் முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

     இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத் தருமாறு கூறி ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் கையூட்டாக சுகேஷிடம் தினகரன் கொடுத்ததாக தெற்கு டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் தங்கியிருந்த சுகேஷ் சந்திராவிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை கடந்த 17ஆம் தேதி டெல்லி காவல்துறை பறிமுதல் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

     இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் அவரது உதவியாளர் ஜனார்த்தன் ஆகியோரிடம் டெல்லிப் காவல்துறை தொடர்ந்து 4 நாட்கள் விசாரணை நடத்தினார்கள். சுமார் தினகரனிடம் 36 மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர் நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

     இந்த விசாரணையின் போது இன்னொரு இடைத்தரகரான ஷா பைசல் என்பவர் பற்றிய தகவலும் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஷா பைசலை சுகேஷ் சந்திரா அடையாளம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

     இதனையடுத்து ஷா பைசல் இன்று நேரில் அணியமாக வேண்டும் என்று டெல்லி காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

     ஆர்வக் கோளாறில் அதிமுகவினர் செய்யும் தவறுகளா?

தருணம் பார்த்து, அதிமுக மீது களங்கம் கற்பிக்க மேற்கொள்ளப் படும் அரசியல் சதிகளா?

என்பனவைகளுக்கு காலம் நமக்கு தெளிவான பதிலைத் தராமல் போகாது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.