Show all

நண்டு விடும் போராட்டம்! மீனவர்களுக்காக அறிவித்த திட்டங்களை அமைச்சர் ஜெயக்குமார் செய்திட வலியுறுத்தி

15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மீனவப் பெண். நர்மதா நந்தகுமார் அவர்கள், மீனவர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி, அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டருகே நண்டு விடும் போராட்டத்தை நடத்தி கைதாகி உள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் இயற்கை சீற்றத்தால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தினமும் தொலைகாட்சிகளில் மட்டுமே புதிய புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். ஓகி புயலினால் தமிழக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 

அமைச்சர் ஜெயக்குமார் ஏராளமான திட்டங்களை வெளியிடுகிறார், ஏராளமான நிதிகளை தமிழக அரசு ஒதுக்குவதாக அறிவிக்கிறார். ஆனால் இந்த நிதிகள் முறையாக போய் சேர்க்கின்றனவா என்பது தெரியவில்லை. 

நண்டு கூட பாதுகாப்பான இடத்தில் வாழ்கிறது. ஆனால் மீனவர்களோ இயற்கை சீற்றத்தால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே நண்டு போல் மீனவர்களும் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காக, நான் நண்டு விடும் போராட்டம் நடத்தினேன். 

மீனவர்களுக்காக அறிவித்த திட்டங்களை அமைச்சர் ஜெயக்குமார் வேகமாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நான் அடுத்தபடியாக ஆமை விடும் போராட்டம் நடத்தவுள்ளேன் என்றார். இதையடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,833.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.