Show all

சென்னை வன்முறை குறித்து தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் கேள்வி

 

     சென்னையில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

     சென்னையில் நேற்று காவல்துறையினர் நடத்திய தடியடி பெரும் வன்முறையாக வெடித்தது. இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

     சென்னை மெரினாவில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் பெரும் வன்முறை வெடித்தது.

     சென்னை ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டது. ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பொதுமக்கள் ஏரளாமானோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் இந்த வன்முறை தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

அதில் சென்னையில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக தமிழக தலைமைச்செயலாளர் மற்றும் காவல்துறை ஆணையாளர் ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

     இதனிடையே சென்னை மெரினாவில் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் 3 பேர் இன்று ஆய்வு செய்தனர். அவர்கள் தடியடி குறித்தும் ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டது குறித்தும் பொதுமக்கள் தாக்கப்பட்டது தொடர்பாகவும் விசாரிக்க உள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.