Show all

செயலலிதாவில் தொடங்கி இன்று ஆளுநர் வரை

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தலையெடுத்ததிலிருந்து, ஆரிய அடிப்படை விழாக்களை மக்கள் கொண்டாடினாலும் கூட தலைவர்கள் கொண்டாடுவதிலும், ஓரளவிற்கு படித்தவர்கள் கொண்டாடுவதிலும் ஒரு தயக்கம் இருந்து வந்தது. பொங்கல் உள்ளிட்ட தமிழர் விழாக்கள் வேண்டுமானல் உற்சாகமாகக் கொண்டாடப் பட்டு வந்தன. 

முதல் முறையாக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற போது 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மகாமகம் திருவிழாவில் பங்கேற்க தனது தோழி சசிகலா உடன் கும்பகோணம் சென்றிருந்தார் 

இதுதவிர அதிமுக அமைச்சர்கள் அவ்வப்போது எங்காவது கோயில்களில் புனித நீராடுவது வழக்கம். தமிழகத்தை சேர்ந்த பிரபலமான சாமியார்களும் வட இந்தியாவிற்கு கூட சென்று புனித நீராடி வருவார்கள். 

தாமிரபரணி ஆற்றுக்கு புஷ்கர விழா இன்று நடத்தப்பட்டது. அதில் ஆளுநர் பங்கேற்று புனித நீராடினார். இதற்காக தென்காசிக்கு தொடர் வண்டியில் சென்ற ஆளுநரை, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தொடர் வண்டி நிலையத்திற்கே சென்று வரவேற்றார். பாபநாசம் இதன் பிறகு, காரில் பாபநாசம் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பாபநாசம், தாமிரபரணி ஆற்றங்;கரையில் புனித நீராடினார். வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஆளுநர் மீது புனித குடங்களில் தண்ணீரை சேகரித்து ஊற்றினர். இதை பய பக்தியோடு ஏற்றுக்கொண்டார் ஆளுநர். தமிழகத்தில் எந்த ஒரு ஆளுநரும், புனித நீராட சென்றதில்லை. இதுவரை பதவி வகித்த ஆளுநர்கள் ராஜ்பவனில் மட்டுமே இருந்து பணியாற்றிய நிலையில், நேரில் ஆய்வு நடத்துவதாக கூறி பன்வாரிலால் புரோகித் ஒவ்வொரு ஊருக்காக போய் வந்தார். இப்போது புனித நீராடல் மூலம் மீண்டும் செய்திகளில் அடிபட்டுள்ளார் ஆளுநர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,938.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.