Show all

ஆறுமுகக் கூட்டணிக்கு ஏறுமுகம் தான்: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்

ஆனைமலை பிரியாணிக்கு நான் அடிமை;

ஆறுமுகக் கூட்டணிக்கு இனி ஏறுமுகம் தான் என, உடுமலையில் நடந்த தேர்தல் கருத்துப் பரப்புதல் கூட்டத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

உடுமலையில், தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி மற்றும் த.மா.கா., வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:

பொள்ளாச்சி, உடுமலை என்றாலே, படப்பிடிப்பு நாட்களில், ஜாலியாக உலா வந்த நாட்களே ஞாபகம் வருகிறது.

கடைசியாக, 'மரியாதை' படத்தின் போது, திருமூர்த்திமலையில் நடந்த படப்பிடிப்பின்போது, அனைவருக்கும் ஆனைமலை பிரியாணி, வாங்கி கொடுத்தேன். தற்போது நான் சைவத்துக்குமாறிவிட்டேன்.

கறிக்கோழி உற்பத்திக்கு பெயர் போன உடுமலை போன்ற பகுதிகள் மின்தட்டுப் பாட்டால், வளர்ச்சி பெறாமல் பின்தங்கி விட்டன.

தி.மு.க., அ.தி.மு.க., மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்தாலும், மின் உற்பத்திக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உடன்குடி மின் உற்பத்தி நிலையத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இது குறித்து சட்டமன்றத்தில் கேட்டதற்கு,

இடைத்தேர்தலில் நிற்க திராணியுள்ளதா என கேட்டு, பிரச்னையை திசை திருப்பினர்.

தற்போது, எங்களது கூட்டணி, ஆறுமுக கூட்டணியாக அமைந்து, ஏறுமுகத்தில் செல்கிறது. மதுவிலக்கு கேட்டு போராடிய காந்தியவாதி சசிபெருமாள் இறந்தும், இந்த அரசு அசைய வில்லை.

நான் முதல்வரா?

என்பதெல்லாம், மக்கள் கையிலேயே உள்ளது.

எங்களது கூட்டணியில், ஒருவர் தவறு செய்தால், மற்றொருவர் சுட்டி காட்டுவர். இவ்வாறு, விஜயகாந்த் பேசினார்.

கூட்டத்தில், வேட்பாளர்கள், உடுமலை கணேஷ்குமார் (தே.மு.தி.க.,), மடத்துக்குளம் மகேஸ்வரி (த.மா.கா.,), தாராபுரம் திருவள்ளுவன் (தமிழ்ப் புலிகள்), பல்லடம் முத்துரத்தினம் (ம.தி.மு.க.,) உட்பட பலர் பேசினர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.