Show all

விஜய் நடித்துள்ள தெறி வட அமெரிக்காவில் 1மில்லியன் டாலர் வசூலித்து சாதனை

விஜய் நடித்துள்ள தெறி படம் வட அமெரிக்காவில் (அமெரிக்கா ரூ கனடா) 1 மில்லியன் டாலர் வசூலித்து சாதனை செய்துள்ளது.

 

சென்ற வாரம் வெளியான இந்தப் படம், வியாபார ஒப்பந்தத்தில் உண்டான சிக்கல்கள் காரணமாக செங்கல்பட்டுப் பகுதிகளில் சில திரையரங்குகளில் மட்டும் வெளியாகவில்லை. மற்றபடி உலகெங்கும் வெளியாகி வசூலில் நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டு வருகிறது.

 

வெளிநாடுகளிலும் தெறி படத்தின் வசூல் அதிக கவனம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு இதுபோன்ற வெளிநாட்டுப் பகுதிகளில் ஹிந்திப் படங்களுக்கு பஞ்சாபி படங்கள்தான் அதிக போட்டி அளிக்கும். இப்போது தெறி படம் அந்த இடத்தைப் பிடித்துள்ளது என்று சினிமா நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.

 

இந்நிலையில் நேற்றுடன் தெறி படம், வட அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வசூலித்து சாதனை செய்துள்ளது. அதாவது 8 நாள்களில் 6.65 கோடி ரூபாய்! வட அமெரிக்காவில் இதுவரை வெளியான விஜய் படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்கிற பெருமை ‘தெறி’க்குக் கிடைத்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.