Show all

குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட செயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடக் கூடாது

உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட செயலலிதாவின் பிறந்தநாளை இன்று கொண்டாடினால், சந்தனக் கடத்தல் வீரப்பன், ஆட்டோ சங்கர் ஆகியோரின் பிறந்தநாள்களைக் கொண்டாட வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

     சொத்து குவிப்பு வழக்கில் செயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

     இந்நிலையில் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்த நாளை, கடந்த வௌ;ளிக்கிழமை தமிழக அரசும், அதிமுகவினரும் கொண்டாடினர்.

     தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 69 லட்சம் மரக்கன்றுகள் நடுவது, மருத்துவத்துறை சார்பில் 690 சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துவது போன்றவற்றை செயல்படுத்தி செயலலிதா பிறந்தநாளை அரசு விழா போல் கொண்டாடினார்.

     குற்றவாளியின் பிறந்த நாளை அரசு விழா போல் கொண்டாடுவதா என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

     இதுகுறித்து தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவிக்கையில், குற்றவாளிகளான செயலலிதா, சசிகலா ஆகியோரை முன்னிலைப்படுத்தும் விதமாக செயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழாவில் தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டது சட்டவிரோதமாகும்.

     இந்தத் தவறான முன்னுதாரணம் தொடருமேயானால் வரும் காலங்களில் சந்தன கடத்தல் வீரப்பன், ஆட்டோ சங்கர் போன்ற குற்றவாளிகளின் பிறந்த நாள்களையும் அரசு விழாவாக கொண்டாட வேண்டிய நிலை ஏற்படும்.

     எனவே தமிழக ஆளுநர் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

     செயலலிதா குற்றவாளி என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. செயலலிதா ஆட்சிக் கட்டிலேற வாக்களித்தது மக்கள் தீர்ப்பு. இதில் எது சரி?

உச்சநீதி மன்றத் தீர்ப்பை குறை சொல்லுவது சட்ட விரோதம்; தேசத் துரோகம்.

மக்கள் தீர்ப்பை குறை சொல்லுவது சட்டவிரோதம் தேசத்துரேகம் எல்லாம் இல்லையா?

என்ற கேள்விகளுக்கெல்லாம் என்ன விடை?

நீதிமன்றத்தின் மீது அரசியல் தலையீடு எப்படி கூடாதோ அப்படி அரசியல் மீதும் நீதிமன்றத்தின் தலையீடு கூடாது. என்பது நியாயமான வாதமில்லை என்று கூற முடியுமா?

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பது தாம்; நம் பழந்தமிழர் கண்ட நீதி.

அரசியலில் பிழை செய்வோரை மக்கள் தாம் தண்டிக்க வேண்டும்.

எதிராளிகள் கருத்;துப் பரப்புதல் செய்யலாமேயொழிய சட்டத்தின் மூலம் தண்டிக்கிற பொறுப்பை கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

அரசு மது விலக்கை அமல்படுத்தினால் நீதிமன்றம் குடிப்பது குற்றம் என்று சொல்லும்.

அரசு சாராய வணிகம் செய்தால் நீதிமன்றம் குடிப்பது குற்றம் இல்லை என்று சொல்லும்.

     மக்கள் மன்றத்தில் குடிப்பது எப்போதும் குற்றம் தான்.

மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். எதைக் காரணம் காட்டியும் மக்கள் தீர்ப்பை இழிவு படுத்தக் கூடாது.

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையான் ஆளப் படும்.

இது தான் தமிழ் மக்கள் நீதி.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.