Show all

தமிழக இணையச் சேவை மையங்களில் வழங்கப்பட்டு வந்த ஆதார் நெகிழி அட்டை விநியோகம் நிறுத்தம்

30,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் முழுவதும் இணையதள சேவை மையங்களில் வழங்கப்பட்டு வந்த ஆதார் நெகிழி அட்டை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. நெகிழி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்த ஆதார் ஆணையம் தடை விதித்ததையடுத்து தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் பிறப்பு இறப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசின் இணையதள சேவை மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. வாக்காளர் அடையாள அட்டைகள் நெகிழி அட்டைகளாக இணையதள சேவை மையங்களில் வழங்கப்படுகின்றன.

இதே போன்று ஆதார் அட்டைகளும் நெகிழி அட்டைகளாக இ சேவை மையங்களில் வழங்கப்பட்டு வந்தன. நெகிழி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்த கடந்த வாரத்தில் ஆதார் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. ஆதார் விவரங்களை பதிவிறக்கம் செய்து மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் ஆதார் ஆணையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து தமிழக அரசு நெகிழி ஆதார் அட்டைகள் வழங்குவதை நிறுத்தியுள்ளது. இசேவை மையங்களை நிர்வகித்து வரும் தமிழக அரசு கம்பிவட தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இசேவை மையங்களில் ஆதார் அட்டைகளின் நகலை ஏ4 தாளில் ரூ.12க்கு அச்சிட்டு வழங்கும் சேவை தொடரும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,696

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.