Show all

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் ஓராண்டு பந்துவீச தடை

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ்-க்கு ஓராண்டு பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது.இது அவர் மீது தொடுக்கப்பட்ட இரண்டாவது புகார்.இரண்டாவது முறையாக பவுலிங் விதி மீறலில் ஈடுபட்ட முகமது ஹபீஸ், சர்வதேச போட்டிகளில் விளையாட ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணியின் 'ஆல் ரவுண்டர்' முகமது ஹபீஸ். இவரது பவுலிங் குறித்து சந்தேகம் எழ 2014, நவம்பர் மாதம் தடை விதிக்கப்பட்டது. பல்வேறு பயிற்சிகளுக்குப் பின் இதிலிருந்து மீண்ட இவரது தடையை கடந்த ஏப்., மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (I.C.C) விலக்கிக் கொண்டது.

தற்போது இலங்கை அணிக்கு எதிரான காலே டெஸ்டில் (ஜூன் 17-21) இவரது பவுலிங் குறித்து மீண்டும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து கடந்த 6 ம் தேதி இவருக்கு சென்னையில் 2 மணி நேரத்துக்கும் மேல் சோதனை நடந்தது. இதில் அளவுக்கு அதிகமாக மணிக்கட்டை வளைத்து பவுலிங் செய்தது உறுதியானது. இதையடுத்து இரண்டு ஆண்டுக்குள் இரண்டாவது முறையாக இப்படி செய்ததால், சர்வதேச கிரிக்கெட்டில் பவுலிங் செய்ய முகமது ஹபீசிற்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.