Show all

ரூ.676.51 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்

கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறைகள் சார்பில் ரூ.676.51 கோடி ரூபாய் மதிப்பிலான நல திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் - ஆழ்கடலில் மீன்பிடிக்க நவீன வசதிகளுடன் சூரை மீன்பிடி படகுகள் கட்ட ரூ.30 லட்சம் மானியம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.இதன்படி தேர்வான 171 மீனவர் குழுக்களை சேர்ந்த 580 மீனவர்களுக்கு ரூ.51.30 கோடி ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். 5 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

அண்ணா பால் உற்பத்தியாளர்கள் நலநிதி திட்டத்தின் கீழ் 49 பயனாளிகளுக்கு ரூ.85.75 ஆயிரம் நிதியையும், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மீன்வளத்துறைக்கு 3 ரொந்து படகுகளையும் முதல்வர் வழங்கினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.