Show all

இந்திய அணி அதிரடி வெற்றி! இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில்

துடுப்பாட்டத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி நாளைமறுநாள் நடைபெறும்.

04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: கொழும்புவில் நடைபெற்று வரும் துடுப்பாட்டத்தில், இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட்கள் வேறுபாட்டில் வெற்றிபெற்ற நிலையில், நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 275/9 ஓட்டங்கள் சேர்த்தது. அவிக்சா பெர்ணான்டோ (50), அசலங்கா 65 (68) ஆகியோர் ஐம்பதைக் கடந்து அசத்தினார்கள்.

இலக்கைத் துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் முதல் வரிசை வீரர்கள் பிரித்விசா (13), சிகர் தவன் (29), இசான் கிசன் (1) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. மனிஷ் பாண்டே (37), சூர்யகுமார் யாதவ் (53), க்ருனால் பாண்டியா (35) ஆகியோர் ஓரளவுக்குச் சிறப்பாக விளையாடி ஆட்டமிழந்தார்கள். இறுதியில், 84 பந்துகளில் 82 ஓட்டங்கள் முடிக்க வேண்டும் என்ற நிலையில்கூட்டாளிகள் அமைத்த டெய்ல் என்டர்ஸ் தீபக் சாகர் (69ழூ), புவனேஷ்வர் குமார் (19ழூ) இருவரும் சிறப்பாக விளையாடி, அணிக்கு 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள்.

இலங்கை அணியில்  பெர்ணான்டோ (50), பனுகா (36) இருவரும் ஓரளவுக்குச் சிறப்பான தொடக்கம் தந்தனர். இதனால், இலங்கை அணி 13 ஓவர்களில் 75ஃ0 ஓட்டங்கள் எடுத்தது. இந்த அணி 300 ஓட்டங்களை எட்டிவிடும் எனக் கருதப்பட்டது. ஆனால், ராஜபக்சா (0) தனஞ்ஜெயா டி சில்வா (32), சனகா (16), கசரங்கா (8) போன்றவர்கள் சிறப்பாக செயலாற்றாமல் ஆட்டமிழந்தார்கள். இவர்களில் யாரெனும் இருவரும் அதிரடி காட்டியிருந்தால், இலங்கை 300 ஓட்டங்களை அடித்து, வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியிருக்கும்.

இலங்கை அணியில் ஸ்பின்னர் வனிந்து கசரங்கா, வேகப்பந்து வீச்சாளர் கருணரத்னே ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வந்தனர். இருப்பினும், கடைசி நேரத்தில் இவர்களுக்குத் தொடர்ந்து ஓவர்கள் கொடுக்கப்படவில்லை. 40ஆவது ஓவருக்குப் பிறகு கசரங்காவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, சண்டகனுக்கு வாய்ப்பு கொடுத்தார் தலைவர். ஸ்பின்னர் சண்டகன் போட்டியில் தொடக்கம் முதலே அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்து வந்தார், புல்டாஸ் பந்துகளை அடிக்கடி வீசி சொதப்பினார். இப்படிப்பட்டவருக்கு 40ஆவது ஓவருக்குப் பிறகு, இரண்டு ஓவர்கள் பந்துவீச வாய்ப்பு கொடுத்ததால், புவனேஷ்வர் குமார், தீபக் சாகர் இருவரும் சிறப்பாக விளையாடி ஓட்டங்களைச் சேர்த்தார்கள்.

பவுன்சர்களை அற்புதமாக வீசி, அச்சுறுத்தி வந்த கருணரத்னேவுக்கு கடைசி பந்து ஓவர்களில் பந்துவீச வாய்ப்பே கொடுக்கவில்லை. அவர் மொத்தம் 6 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தார். கடைசி 10 ஓவர்களில் வாய்ப்பு கொடுத்திருந்தால், புவி தீபக் கூட்டாளிகள் ஒரு கை பார்த்திருப்பார்.

இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் பவுன்சர்கள் வீசுவதில் மட்டுமே குறியாக இருந்தனர். யார்க்கரைவீச முயற்சிக்கவில்லை. இதனால், பேட்ஸ்மேன்கள் எவ்வித நெருக்கடியும் இன்றி விளையாடினார்கள். குறிப்பாக, கடைசியாக களமிறங்கிய புவி, தீபக் ஆகியோருக்கு யார்க்கர் வீசாமல், பவுன்சர் மற்றும் குட் நென்த் பந்துகளைத் தான் அதிகம் வீசினர். இதனால், இருவரும் பதற்றம் இல்லாமல் ஓட்டங்களை சேர்த்து, அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி வரும் நாளைமறுநாள் நடைபெறும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.