Show all

விராட் கோலி ரசிகர்மீது -நாட்டின் இறையாண்மைக்கு கேடு விளைவித்தல்- பிரிவின் கீழ் வழக்கு

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின்   பாகிஸ்தான் ரசிகரான உமர் டிராஸ், தனது வீட்டின் மேல் இந்திய தேசியக் கொடியை ஏற்றியதற்காக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இந்த நிலையில், தனக்கு ஜாமீன் கோரி லாகூர் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், உமர் டிராஸ் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை நேற்று விசரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், 50 ஆயிரம் ரூபாய்க்கான பிணையத்தொகையும் அதற்கான உத்தரவாதத்துடனும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

 

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் ஒகாரா மாவட்டத்தை சேர்ந்தவர் உமர் டிராஸ்(வயது22). இவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் தீவிர ரசிகர் ஆவர். கடந்த மாதம் 26-ந் தேதி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் விராட் கோலி 90 ரன்கள் அடித்து தன் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

 

இதனால் மனம் நெகிழ்ந்துபோன உமர் டிராஸ் அன்று தன் வீட்டின் மேற்கூறையில் இந்திய நாட்டின் கொடியை பறக்கவிட்டார். இதை அறிந்த பாகிஸ்தான் போலீசார் அவர் வீட்டிற்கு சென்று உமர் டிராசை கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அவர் மீது 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படத்தக்க  -நாட்டின் இறையாண்மைக்கு கேடு விளைவித்தல்- பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.