Show all

ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார், ஜப்பான் தலைமைஅமைச்சர்! டோக்கியோ ஒலிம்பிக் போட்டி

நடத்தியே காட்டுவோம் என்று சொல்லப்பட்டு வந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்குத் தள்ளி வைத்துவிட்டார் ஜப்பான் தலைமைஅமைச்சர் அபே. 

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடத்தியே காட்டுவோம் என்று சொல்லப்பட்டு வந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்குத் தள்ளி வைத்துவிட்டார் ஜப்பான் தலைமைஅமைச்சர் அபே. 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய விளையாட்டு அரங்கங்கள், சாலைகள், விடுதிகள் என ஏராளமான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. கனடா, ஆஸ்திரேலியா நாடுகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்தன.

எனினும், போட்டியை நடத்துவதில் ஜப்பான் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் உறுதியாக இருந்தன. கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் சுடரும் வெள்ளிக்கிழமை ஜப்பான் போய் சேர்ந்தது. இந்நிலையில் ஜப்பான் பிரதமர் அபே தலைமையில் சர்வதேச ஒலிம்பிக் சங்கத் தலைவர் தாமஸ் பாக், ஜப்பான் ஒலிம்பிக் குழு நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்குப் பிறகு பேசிய ஜப்பான் பிரதமர் சின்சோ அபே ‘வீரர்களின் நலன், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்கு தள்ளி வைப்பதாக’ அறிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.