Show all

மிதாலி ராஜ் சாதனை! பெலின்டா கிளார்க்கின் சாதனையை சமன் செய்தார்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவி பெலின்டா கிளார்க்கின் (23 ஆட்டங்கள்) சாதனையை மிதாலி ராஜ் சமன் செய்தார்.

27,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: மகளிர் உலக கோப்பை துடுப்பாட்டப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. பூவா தலையா வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் ஆடிய நியூசிலாந்து 50 முடிப்பில் 9 இலக்குக்கு 260 ஓட்டங்களை எடுத்தது. அமெலியா கெர் 50 ஓட்டமும், எமி சாட்டர்வெய்ட் 75 ஓட்டமும், எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய இந்தியா 198 ஓட்டத்தில் வெளியேறியது. இதன்மூலம் நியூசிலாந்து 62 ஓட்ட வேறுபாட்டில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியதன் மூலம் உலக கோப்பை போட்டியில் அதிக ஆட்டங்களில் தலைவியாக இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவி பெலின்டா கிளார்க்கின் (23 ஆட்டங்கள்) சாதனையை மிதாலி ராஜ் சமன் செய்தார்.

முன்னதாக தலைவி மிதாலி ராஜ் ஆறு உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,184.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.