Show all

நியூசிலாந்துக்கு எதிரான முதல் T20 போட்டியில் படு தோல்வி அடைந்தது இந்தியா

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரைக்கைப்பற்றிய நிலையில், நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் T20 போட்டி வெல்லிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிம் செய்பெர்ட் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார்.  இந்திய தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை, புவனேஷ், கலீல், சாகல் மற்றும் க்ருனால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 220 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய இந்திய அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் டோனி, தவான், விஜய் ஷங்கர் மற்றும் க்ருனால் ஆகியோர் மட்டுமே இரட்டைஇலக்கங்களில் ரன் அடித்தனர், மற்ற அனைவரும் ஒற்றை இழக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. நியூசிலாந்து தரப்பில் டிம் சோதி 3 விக்கெட்டையும் இஷ் சோதி, லோக்கி பெர்குசன், மிட்செல் சான்ட்னெர் தலா 2 விக்கெட்டையும் டேரில் மிட்செல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.