Show all

நாற்பத்தி நான்காவது ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டியை வீட்டில் இருந்தும் பார்க்க முடியும்

வியாழன் அன்று தொடங்கும், தமிழ்நாட்டிற்கான கெத்து ஆன, உலகிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் நடத்தப்படும் பேரளவான சதுரங்கப் போட்டியை வீட்டில் இருந்தும் பார்க்க முடியும். 

10,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: உலகிலேயே முதன்முறையாக பேரளவான சதுரங்கப் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுவது தமிழ்நாட்டிற்கான கெத்து ஆகும். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்ச்சிக்கு 92 கோடி ஒதுக்குவதாக தெரிவித்தார். முப்பத்தியேழு நாட்களுக்கு முன்பு ஒலிம்பிக் போட்டிக்கான முதல் தீபந்த ஓட்டத்தை தலைமைஅமைச்சர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வியாழக்கிழமை மாமல்லபுரத்தில் இந்த 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதில் 187 நாடுகளில் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிலையில் சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை வீட்டில் இருந்தே காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Chess Olimpiad, Live chess, chess24.com ஆகிய இணையதளங்களின் வாயிலாக போட்டியை காணலாம். இதற்காக தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ள செல்பேசி செயலி மூலமாகவும் இந்த தொடரை காணலாம் என தொழில்நுட்ப பணிகள் கண்காணிப்பாளர் ஆனந்த் பாபு தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,321.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.