Show all

2017 ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் அறிவிப்பு: கோலி அபாரம்

2017 ஆம் ஆண்டின் சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியலை ஐசிசி  இன்று அறிவித்துள்ளது. இதில் 2017-ம் ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த ஒருநாள் வீரர் என இந்திய கேப்டன் விராட் கோலி இரு விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளார். இதே போல், டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரராக ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

வளர்ந்து வரும் வீரருக்கான விருதிற்கு பாகிஸ்தான் அணியை சேர்ந்த ஹசன் அலியும், சிறந்த டி20 செயல்திறன் விருதுக்கு இந்திய அணியின்  சூழல் பந்து வீச்சாளர் சாஹலும் தேர்வாகியுள்ளார். மேலும் விராட் கோலிக்கு சர் கார்பீல்டு சோபர்ஸ் கோப்பையும் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த வருட டெஸ்ட் மற்றும் ஒரு நாள் என இரண்டு கனவு அணிக்கும் விராட் கோலி தான் கேப்டன் ஆகா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் கனவு அணி விவரம்

  • டேவிட் வார்னர்
  • ரோஹித் சர்மா
  • விராட் கோலி (கேப்டன்)
  • பாபர் அசாம்
  • ஏபி டிவில்லியர்ஸ்
  • டி-காக் (விக்கேட் கீப்பர்)
  • பென் ஸ்டோக்ஸ்
  • டிரெண்ட் போல்ட்
  • ஹசன் அலி
  • ரஷித் கான்
  • ஜாஸ்ப்ரீட் பும்ரா

டெஸ்ட் கனவு அணி விவரம்

  • டியன் எல்கர்
  • டேவிட் வார்னர்
  • விராட் கோலி
  • ஸ்டீவ் ஸ்மித்
  • புஜாரா
  • பென் ஸ்டோக்ஸ்
  • டி-காக்
  • ரவி அஷ்வின்
  • ஸ்டார்க்
  • ரபாடா
  • ஜேம்ஸ் ஆண்டர்சன்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.