Show all

வினையாகிப்போன விளையாட்டு! வில்வித்தை பயிற்சியில் சிறுமியின் தோளில் பாய்ந்தது அம்பு

வில்வித்தை பயிற்சியில் 12 அகவையுள்ள சிறுவர், சிறுமியர் ஈடுபட்டனர். அப்போது சிறுவன் ஒருவன் எய்த அம்பு, தவறுதலாக, சிவாஞ்சினி கோகைகன் என்ற சிறுமியின் தோள்பட்டையில் பாய்ந்தது.

26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அசாமில் வில்வித்தை பயிற்சியின் போது, 12 அகவை வீராங்கனையின் தோள்பட்டையில் அம்பு பாய்ந்த நிகழ்வு, நம் நெஞ்சத்தில் அம்பு பாய்ச்சுவதான சோகத்தைத் தருகிறது. 

அசாமிலுள்ள சபுயாவில், இந்திய விளையாட்டு ஆணையத்தின் அசாம் மாநிலத்திற்கான மையம் உள்ளது. இங்கு வில்வித்தை பயிற்சியில் 12 அகவையுள்ள சிறுவர், சிறுமியர் ஈடுபட்டனர். அப்போது சிறுவன் ஒருவன் எய்த அம்பு, தவறுதலாக, சிவாஞ்சினி கோகைகன் என்ற சிறுமியின் தோள்பட்டையில் பாய்ந்தது.

அப்பகுதியிலுள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற அச்சிறுமி, உலங்குவானூர்தி மூலம் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், அம்பு, சிறுமியின் தோள்பட்டை எலும்பை துளைத்திருந்தது. தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளது என்றனர். அறுவை சிகிச்சைக்குப்பின் சிறுமி இன்று சிறப்புப் பிரிவில் அனுமிதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,393.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.