Show all

அடடே எந்தநாடு! மனஉளைச்சலா? வேலைக்கு போகாமல் மாதம் ரூ.1.4 லட்சம் வாங்கிக்கொண்டு மனஉளைச்சலுக்குத் தீர்வு காணுங்கள்: அரசு சொல்கிறது

உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகள் பட்டியலில், இந்த முறையும் பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது. உலக வல்லரசாக சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவே 18 அல்லது 19-வது இடத்தில் தான் இருக்கிறதாம்.   

27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகள் பட்டியலை தயாரிக்க, ஒரு நிபுணர் குழு, உலகில் இருக்கும் 156 நாடுகளுக்கு பயணித்து, அந்த நாட்டு மக்களைச் சந்தித்துப் பேசி, பல விவரங்களைச் சேகரிக்கிறார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என அளவிட்டு ஒரு பட்டியலைத் தயார் செய்கிறார்கள். அது தான் உலக மகிழ்ச்சிக் குறியீடு கடந்த ஆண்டுக்கான நிபுணர்கள் குழு வெளியிட்டு இருக்கிறார்கள். 

இந்த முறையும் பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது. பின்லாந்து இந்த பட்டியலில் முதலிடம் பிடிப்பது இது இரண்டாவது முறை. இந்த உலக மகிழ்ச்சி குறியீட்டுப் பட்டியலில் நார்டிக் நாடுகள்தாம் (வட ஐரோப்பா மற்றும் வட அட்லாண்டிக் நாடுகள்) முதன்மை இடங்களைப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். உலக வல்லரசாக சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவே 18 அல்லது 19-வது இடத்தில் தான் இருக்கிறதாம்.   

கடந்த இரண்டு ஆண்டுகளில் பின்லாந்து, அதற்கு முந்தைய ஆண்டில் நார்வே, அதற்;கும் முன்பு டென்மார்க், அதற்கும் முன்பு ஸ்விட்சர்லாந்து என இந்த நார்டிக் நாடுகள்தாம், உலக மகிழ்ச்சிக் குறியீட்டுப் பட்டியலில், முதல்பத்து இடங்களைப் பிடித்துக் கொண்டு இருக்கின்றன. 

நோர்டிக் நாடுகள் என்பன வட ஐரோப்பாவில் உள்ள நோர்வே, சுவீடன், டென்மார்க் ஆகிய மூன்று ஸ்காண்டனேவிய நாடுளையும், அத்துடன் பின்லாந்து, ஐஸ்லாந்து, ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியதாகும். இவற்றுடன் டென்மார்க் நாட்டைச் சார்ந்த பிரதேசங்களான கிறீன்லாந்து, பரோயே தீவுகள், பின்லாந்து நாட்டை சார்ந்த ஓலாண்ட் மற்றும் நோர்வே நாட்டைச் சேர்ந்த சான் மேயன் தீவும், சுவால்பாத் தீவுகளும் இந்த நோர்டிக் நாடுகளின் அமைப்புக்குள் வருகின்றன.

பொதுவில் இந்த நோர்டிக் நாடுகள், என்ற பெயர் பலராலும் ஸ்காண்டனேவிய நாடுகள் என்ற பெயருடன் பொருத்திப் பார்க்கப்படுவதாயினும், உண்மையில் இவை வெவ்வேறாகவே இருக்கின்றன.

இந்நாடுகளில் மொத்தமாக இரண்டு கோடியே ஐம்பது இலட்சத்திற்கு மேலான மக்கள் வசிக்கின்றார்கள். இங்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஈழத்தமிழர்கள் அண்மையில் குடியேறியுள்ளார்கள். மேலும், நோர்டிக் நாடுகள் இலங்கை இனப்பிரச்சினையில் நடுவர்களாகவும் ஆகவும் உதவுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நார்டிக் நாடுகள், உலகிலேயே மகிழ்ச்சியான நாட்டு மக்களாக இருக்க காரணம்:- அவர்களின் வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை தான் முதல் காரணமாகச் சொல்கிறார்கள். இந்த நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, பெரிய பணக்காரர்கள் ஆக வேண்டும் என்கிற ஆசை எல்லாம் அதிகம் கிடையாதாம். எனவே எப்போதும் கூடுதல்நேர வேலை பார்க்கவே மாட்டார்களாம். ஒரு சராசரி டென்மார்க் குடிமகன் ஒரு கிழமைக்கு 37 மணி நேரம் மட்டும் தான் வேலை பார்ப்பாராம். நார்டிக் நாடுகளில் கூடுதல்நேர வேலை பார்ப்பவர்களைத் திறமையற்றவர்கள் போலப் பார்ப்பார்களாம். 

நாள் ஒன்றுக்கு சராசரியாக 7.5 மணி நேரம் மட்டுமே வேலை பார்ப்பார்களாம். ஆனால் அந்த வேலை நேரத்துக்கு இடையில் வெளியே செல்வது நீண்ட நேரத்துக்கு ஓய்வு எடுப்பது எல்லாம் செய்யமாட்டார்களாம். குறிப்பாக வேலை முடித்துவிட்டு, மாலை நேரங்களில், சக ஊழியர்களோடு வெளியே செல்வது எல்லாம் மிக மிகக் குறைவாம். எனவே குறித்த நேரத்துக்குள் தரமாக வேலையை முடித்துவிடுவார்களாம். 

பின்லாந்தில், ஒரு ஊழியர், கிழமைக்கு ஒரு நாள் அலுவலகத்துக்கே போகாமல், வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாமாம். அதே போல பின்லாந்தில் ஊழியர்கள், தங்கள் வேலை நேரத்தை காலையில் 3 மணி நேரம் முன்னதாக வேலை செய்யத் தொடங்கலாமாம். அதே போல மாலை 3 மணி நேரம் வேலையை தள்ளிப் போட்டுச் செய்யவும் வாய்ப்பு உள்ளதாம்.

டென்மார்க்கில், ஒரு நிறுவனத்தில் நிரந்தர ஊழியராக இருப்பவருக்கு, ஒரு ஆண்;டில், ஐந்து கிழமை கட்டாய விடுமுறை வழங்கியே ஆக வேண்டுமாம். இந்த ஐந்து கிழமை சுற்றுலா விடுமுறைக்கு நிறுவனங்;கள், பணம் கொடுப்பார்களாம். எனவே உற்பத்தித் திறன் இந்த டென்மார்க் மக்களிடம் அதிகரித்து இருக்கிறதாம். 

அதே போல, ஒருவர் வேலையில் சேரும் போதே, சராசரியாக மாதம் 62.5 அமெரிக்க டாலர் தொகை, வேலையிழப்பு காப்பீட்டிற்குப் பணம் செலுத்துவார்களாம். அந்த ஊழியர் வேலை பார்க்கும் அலுவலகத்தில், அவருக்கு வேலை போய்விட்டால், அடுத்த வேலை தேடும் வரை அல்லது இரண்டு ஆண்டுகள் வரை, மாதாமாதம் ஒரு தொகையை மேலே சொன்ன காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து கொடுப்பார்களாம்

வேலை பறிபோனவர்கள் அல்லது வேலையை விட்டவர்களுக்கு மாதாமாதம் பணத்தை மட்டும் கொடுப்பதோடு அரசு நின்றுவிடுவதில்லை. வேலை இழந்தவர்கள் அடுத்த வேலையைப் பெற தேவையான கல்வித் தகுதி அல்லது பட்டப் பயிற்சி மற்றும் கலந்துரையாடல் சேவைகளையும் அரசே வழங்குமாம். 

வேலை எனக்கு பிடிக்கலிங்க, எனக்கு ஒரே மனஉளைச்சலாக இருக்கிறது என டென்மார்க்கில் சொன்னா போதும், மாதம் 2,000 அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமாராக 1,40,000) கொடுத்து, மனஉளைச்சலில் இருந்து வெளி வரச் சொல்வார்களாம். இந்த மாதம் 1.4 லட்சம் ரூபாயை டென்மார்க் அரசு கொடுக்குமாம். டென்மார்க்கில் பள்ளிக் கல்வி, கல்லூரி கல்வி, மருத்துவம் என அனைத்தும் இலவசமாம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,394.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.