Show all

ஜப்பானின் வீரப்பெண்மணியும் டென்மார்க் வீரஆணும் வாகை சூடினர்! டென்மார்க் சிறகுபந்தாட்ட விளையாட்டு போட்டியில்

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் இராமசாமி அவர்கள், முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பது ஈழத் தமிழரை அவமதிப்பதாகும் என்று தெரிவித்துள்ளார்கள்.

03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: டென்மார்க் பன்னாட்டு சிறகுப்பந்தாட்டப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நஜோமி ஒகுகரா, கரோலினா மரினைத் தோற்கடித்து வாகையர்  பட்டத்தை தட்டிச் சென்றார்.

டென்மார்க் ஓபன் பன்னாட்டு சிறகுப்பந்தாட்டப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நஜோமி ஒகுஹரா, கரோலினா மரினை தோற்கடித்து வாகையர் பட்டத்தை வென்றெடுத்தார்.

டென்மார்க் திறந்தவெளி பன்னாட்டு சிறகுப்பந்தாட்டப் போட்டி அங்குள்ள ஓடென்ஸ் நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முன்னாள் உலக வாகையரான நஜோமி ஒகுஹரா 21-19, 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் ஒலிம்பிக் வாகையர் கரோலினா மரினை (ஸ்பெயின்) தோற்கடித்து வாகையர் பட்டத்தை வென்றிருக்கிறார். ஒகுஹரா 2 ஆண்டுக்கு பிறகு வென்ற முதல் பட்டம் இதுவாகும். ஆண்கள் பிரிவில் சக நாட்டவரான ரஸ்மஸ் ஜெம்கேவை வீழ்த்தி டென்மார்க்கின் ஆன்டோன்சென் சாதித்தார்.

இந்தப் போட்டிகளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சிறிகாந்த், 49-வது இடத்தில் உள்ள கனடா வீரர் ஜாசன் அந்தோணியை சந்தித்தார்.

33 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-15, 21-14 என்ற புள்ளிகளில் ஜாசன் அந்தோணியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் 19 அகவை இந்திய வீரரான லக்ஷயா சென் 21-15, 7-21, 17-21 என்ற புள்ளிக் கணக்கில் டென்மார்க் வீரர் சோல்பெர்க் விட்டிங்குஸ்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையைக் கட்டினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.