Show all

10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடக்கம்

10வது சீசன் ஐபிஎல் டி20 தொடர் நாளை கோலாகலமாக தொடங்குகிறது.  இதில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ஐதராபாத்தில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

 

56 லீக் போட்டிகள், 2 குவாலிபயர், ஒரு எலிமினேட்டர் என 3 ‘பிளே ஆப்’ சுற்று போட்டிகள், இறுதி போட்டி என மொத்தம் 60 போட்டிகள் நடைபெறுகின்றன. 47 நாட்கள் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட்  மே 21ம் தேதி நிறைவடைகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.