Show all

ஒரு நாள் போட்டியில் 8000 ரன்களை மிக விரைவாக கடந்த வீரர்

ஒரு நாள் போட்டியில் 8000 ரன்களை மிக விரைவாக கடந்த வீரர் என்ற பெருமையை தென் ஆப்ரிக்கா கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் பெற்றுள்ளார். நியூசிலாந்து அணியுடன் ஆடிய அவரது 182வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 8000 ரன்களை கடந்து இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 200 ஆட்டங்களில் 8000 ரன்களை கடந்து முதலிடத்தில் இருந்தார். தற்போது கங்குலி சாதனையை முறியடித்த ஏபி டி வில்லியர்சுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 8000 ரன்களை மிக விரைவாக கடந்த வீரர்கள் பட்டியலில் ஏபி டி வில்லியர்ஸ் முதல் இடத்திலும் (182 ஆட்டங்கள்), சவுரவ் கங்குலி 2வது இடத்திலும் (200 ஆட்டங்கள்), சச்சின் டெண்டுல்கர் 3வது இடத்திலும் (210 ஆட்டங்கள்) உள்ளனர். மேலும் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 5வது இடத்தில (214 ஆட்டங்கள்) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.