Show all

வழக்கு விசாரணை முடியும் வரை சானியாவுக்கு விருது வழங்க இடைக்கால தடை

நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு, விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிசுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த சானியா மிர்சாவை கவுரவிக்கும் வகையில், அவருக்கு கேல் ரத்னா விருது வழங்க மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் பரிந்துரைத்தது. விருதுக்கான தேர்வுக் குழுவினரும் சானியாவை தேர்வு செய்தனர்.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளி வீராங்கனை எச்.எம்.கிரிஷா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘2012 லண்டன் பாராலிம்பிக் மகளிர் உயரம் தாண்டுதலில் நான் வௌ;ளிப் பதக்கமும், 2014 ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலமும் வென்றுள்ளேன். எனவே, கேல் ரத்னா விருதைப் பெற எனக்கே அதிக தகுதி உள்ளதால் சானியாவுக்கு விருது வழங்க தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணை முடியும் வரை சானியாவுக்கு விருது வழங்க இடைக்கால தடை விதித்ததுடன், உரிய விளக்கம் அளிக்க சானியா மற்றும் விளையாட்டு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.