Show all

பாரசூட்டில் இருந்து கீழே குதித்த கேப்டன் டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி முதல் முறையாக பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை படைத்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் டோனிக்கு கடந்த 2011ம் ஆண்டு ராணுவத்தில், ‘லெப்டினன்ட் கலோனல்’ என்ற கவுரவ பொறுப்பு வழங்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகி விட்டதால் இப்போது அவருக்கு நிறைய ஓய்வு கிடைக்கிறது. இதையடுத்து ராணுவம் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள டோனி, ஆக்ராவில் உள்ள பாராசூட் பயிற்சி பள்ளிக்கு கடந்த 5–ந்தேதி வந்தார். அங்கு உயர்மட்ட இந்திய ராணுவ பாராசூட் பிரிவு வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் ராணுவ வீரர்கள் உதவியுடன் முதல் முறையாக இன்று பாராசூட்டில் இருந்து கீழே குதித்தார்.ஆக்ரா விமான தளத்தில் இருந்து இந்திய விமானத்தில் சென்ற அவர் 1,250 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து சாகசம் செய்தார். அவர் 70 வினாடிகளில் கீழே இறங்கினார்.

கேப்டன் டோனியை ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.