Show all

சன்டிமால் சதத்தால் 367 ரன்கள் குவித்தது இலங்கை அணி

இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில், 49.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது இந்திய அணி 117.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 375 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 192 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 5 ரன்களை எடுத்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தது.

இதை தொடர்ந்து மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி வீரர் சிறப்பாக ஆடி 162 ரன்கள் குவித்தால் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 367 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 3ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 23 ரன் எடுத்துள்ளது. ராகுல் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். தவான் 13, இஷாந்த் 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

மேலும் இந்த போட்டியில் இந்திய வீரர் அஜிங்க்யா ரகானே 8 கேட்ச் பிடித்து உலக சாதனை படைத்தார். முதல் இன்னிங்சில் 3 கேட்ச் பிடித்திருந்த அவர், 2வது இன்னிங்சில் மேலு 5 கேட்ச் பிடித்து அசத்தினார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் அவர் முதலிடம் பிடித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.