Show all

இரண்டு கேப்டன்கள் முறை இந்தியாவுக்கு சாதகமா?: கங்குலி பதில்

இந்திய கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டம்) கேப்டனாக மகேந்திரசிங் டோனி பணியாற்றி வந்தார்.கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தின்போது டெஸ்ட் போட்டியில் இருந்து டோனி திடீரென ஓய்வு பெற்றார்.

இதனால் வீராட் கோலி டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டத்தில் டோனி கேப்டனாக நீடித்து வருகிறார்.இந்த இரண்டு கேப்டன்கள் முறை இந்தியாவுக்கு சாதகமாக இருக்குமா? என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கங்குலியிடம் கருத்து கேட்கப்பட்டது.

இதுபற்றி அவர் கூறியதாவது:–டெஸ்ட், ஒரு நாள் போட்டி என 2 கேப்டன்கள் முறையை இந்தியா இதற்கு முன்னர் பின்பற்றியது இல்லை. டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் இந்த சூழ்நிலை உருவானது.ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை போன்ற அணிகளில் இரண்டு கேப்டன்கள் முறை இருக்கின்றன. இரட்டை கேப்டன் முறை இந்தியாவுக்கு சாதகமாக இருக்குமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.நாம் வெற்றி பெற்றால் இந்த முறை கை கொடுக்கிறது. தோல்வி அடைந்தால் பாதகமாகி விட்டது என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஆதாயம் தரும் இரட்டை பதவி ஒப்பந்த முறை சரியானதே. இதில் எந்த பிரச்சினையும் இல்லை.இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.