Show all

மைதானத்தில் குறும்பு செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள்

பயிற்சியின்போது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பிராட் பேண்டை, சக வீரர் ஜோ ரூட் கழற்றி விட்ட குறும்பு வீடியோ இணையத்தில் அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. போட்டியின் முதல் நாள் முடிவுக்கு பிறகு இங்கிலாந்து வீரர்கள் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு பெவிலியன் திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது ஸ்டூவர்ட் பிராட்டின் பேண்டை சக வீரரான ஜே ரூட் கீழே இறக்கிவிட்டார். இதனைத்தொடர்ந்து ஸ்டூவர்ட் ரூட்டை மைதானத்தில் துரத்தி பிடி விளையாட்டில் ஈடுபட்டதை அங்கிருந்த ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.