Show all

ராஜ் தாக்கரே எச்சரிக்கை! மகாராஷ்டிரா மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற நாளை காலக்கெடு முடிகிறது

மசூதிகளில் இடையூறாக இருக்கும் ஒலி பெருக்கிகளை அகற்றுவதற்கான 20,சித்திரை (மே 3) காலக்கெடுவில் நான் உறுதியாக இருக்கிறேன். இது மதச்சிக்கல் அல்ல, இது ஒரு நாட்டுச் சிக்கல், என்று எச்சரித்துள்ளார் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே.

19,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: மகாராஷ்டிராவில் மசூதிகளில் வைத்துள்ள ஒலிபெருக்கியை 20,சித்திரை நளாதுக்குள் அகற்ற வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்திருந்தார்.

மகாராஷ்டிரா நாள் கொண்டாட்டத்தையொட்டி அவுரங்காபாத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

மசூதிகளில் இடையூறாக இருக்கும் ஒலி பெருக்கிகளை அகற்றுவதற்கான 20,சித்திரை (மே 3) காலக்கெடுவில் நான் உறுதியாக இருக்கிறேன். இது மதச்சிக்கல் அல்ல, இது ஒரு நாட்டுச் சிக்கல். 

எல்லா ஒலிபெருக்கிகளும் சட்டவிரோதமானது என்று உச்சஅறங்கூற்றுமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்கான 20,சித்திரை காலக்கெடுவிற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதற்கு நான் பொறுப்பேற்க மாட்டேன். 

அவர்கள் (முஸ்லிம்கள்) சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால், நாங்கள் அவர்களுக்கு மகாராஷ்டிராவின் சக்தியைக் காட்டுவோம்.

ஒலிபெருக்கிகளை அகற்றுமாறு காவல்துறையைக் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் கேட்கவில்லை என்றால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்

உத்தரபிரதேச அரசால் ஒலிபெருக்கிகளை அகற்ற முடிகிற போது, உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர அரசு அவ்வாறு செய்வதைத் தடுப்பது எது?

21,சித்திரை முதல் அனைத்து ஹிந்துக்களும் ஹனுமான் சாலிசா வை (பாடல்கள்) மசூதி ஒலிப்பெருக்கிகளின் அளவை விட இரட்டிப்பாக ஒலிக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் வழிபாட்டு தலங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்றும் பணிகள் கடந்த கிழமை முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் அனுமதியின்றி வைக்கப் பட்டிருந்த 53,942 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டு உள்ளன என சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறைத் தலைவர் பிரஷாந்த் குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், வழிபாட்டு தலங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 53,942 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. வரும் நாட்களிலும் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,236.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.