Show all

குழந்தைகளுக்கு- கொரோனா தடுப்பூசி- அதன் நோக்கத்திற்கு பயன் அளிக்காது! எய்ம்ஸ் மூத்த மருத்துவர்

குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் ஒன்றிய அரசின் முடிவு இயல்அறிவுப்பாடானது அன்று என்று வேதனை தெரிவிக்கிறார் எய்ம்ஸ் மூத்த மருத்துவர் சஞ்சய் கே ராய்.

11,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் ஒன்றிய அரசின் முடிவு இயல்அறிவுப்பாடு (சயின்டிபிக்) அற்றது. இந்த முடிவால் எந்தவிதமான கூடுதல் நலனும் விளையாது என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் தொற்றுநோய்தடுப்பு பிரிவின் மூத்த மருத்துவர் சஞ்சய் கே ராய் தெரிவித்துள்ளார்.

நேற்று உரையாற்றிய தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி 15 முதல் 18 அகவை வரை உள்ள பிரிவினருக்கு எதிர்வரும் திங்கட் கிழமை முதல் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

முன்களப்பணியாளர்கள், அறுபது அகவைக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் இருப்போருக்கு ஊக்குவிப்பு தடுப்பூசி அதற்கு அடுத்த திங்கட் கிழமை முதல் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கும் அகவை வந்தோருக்கும் அளித்து பரிசோதிக்கும் பிரிவின் தலைமை ஆய்வாளராக மருத்துவர் சஞ்சய் கே ராய் இருந்து வருகிறார். இந்திய பொது நலங்கு கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்துவரும் சஞ்சய் கே ராய் தலைமைஅமைச்சர் அலுவலகத்தின் கீச்சின் மீது கருத்துப் பதிவிட்டுள்ளார்.

அதில் 'நான் தலைமைஅமைச்சர் மோடியின் தன்னலமற்று சேவைக்குக் கொண்டாடியே. சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் தலைமைஅமைச்சர் மோடி- முன்னெடுத்துள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் முற்றிலும் இயல்அறிவுப் பாடற்றது. இது எனக்கு வேதனையளிக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் கே ராய் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த பல நாடுகள் தொடங்கிவிட்டன. அந்த நாடுகளின் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தபின் ஒன்றிய அரசுகுழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அறிவித்திருக்க வேண்டும். எந்த விதமான தலையீட்டுக்கும் தெளிவான நோக்கம் வேண்டும். நம்முடைய நோக்கம் கொரோனா குறுவியைத் தடுப்பதாகவோ அல்லது, உயிரிழப்பை தடுப்பதாகவோ அல்லது தீவிரத்தன்மையை குறைப்பதாகவோ இருக்கவேண்டும்.

ஆனால், தடுப்பூசி குறித்து நமக்குக் கிடைத்த தகவலின்படி, நோய் தொற்றிலிருந்து எந்தவிதமான பாதிப்பையும் தடுப்பூசியால் ஏற்படுத்தமுடியவில்லை. சில நாடுகளில் ஊக்குவிப்பு தடவை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கூட நோய் தொற்று ஏற்படுகிறது.

பிரிட்டனில் மட்டும் தடுப்பூசி செலுத்திய 50ஆயிரம் பேர் அன்றாட நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள். ஆதலால், தடுப்பூசி என்பது நோய் தொற்றைத் தடுக்காது, ஆனால் தீவிரத்தன்மையைத் தடுக்கும், உயிரிழப்பைத் தடுக்கும்.

கொரோனாவால் 10 லட்சத்துக்கு 15ஆயிரம் பேர்கள் உயிரழக்கிறார்கள். தடுப்பூசி செலுத்துவதன் மூலம் 13 ஆயிரம் முதல் 14 ஆயிரம் பேர்கள் உயிரைக் காக்க முடியும்.

தீவிரமான பாதிப்புக்கு ஆளாகுவோரும் 10 முதல் 15 விழுக்காட்டு பேர்கள் குறைவார்கள். அகவை எய்தியவர்கள் பிரிவில் ஆய்வு செய்தால், மிகப்பெரிய அளவில் பலன்கிடைக்கும். 

குழந்தைகள் பிரிவில் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு தொற்று ஏற்படுவது மிகக்குறைந்த வாய்ப்புதான் இருக்கிறது என்பது புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தெரிகிறது. 10லட்சத்துக்கு 2 பேர் மட்டுமே இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளைப் பொறுத்தவரை நோயின்தீவிரத் தன்மை ஏற்படுவதும் குறைவு, உயிரிழப்பு ஏற்படுவதும் குறைவு அப்படியிருக்கும் போது மேற்கண்ட இரு நோக்களுக்காக தடுப்பூசி ஏன் செலுத்தவேண்டும், இந்த நோக்கங்களை அதுநிறைவேற்றாதே. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் தொடங்கிவிட்டன. அந்த நாடுகளின் தரவுகளை ஆய்வு செய்தபின் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த தொடங்கியிருக்கலாம். இவ்வாறு ராய் தெரிவித்தார்
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,109.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.