Show all

மீண்டும் கிளம்பியது நீட் வேதாளம்!

தமிழ்நாடு, நீட் மறுப்புக்கு, தெளிவான காரணங்களைத் தெரிவித்து வருகின்ற போதும் கூட- விக்கிரமாதித்தியன் கதை வேதாளம் போல, ஒன்றிய அரசின் நீட்வேதாளம், மீண்டும் மீண்டும் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கல்வியில் தொங்கத் தொடங்கி விடுகிறது. 
 
17,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: காளிகோட்டத்தில் (கல்கத்தா) உச்சிமாகாளிப் பட்டணத்தை ஆண்டு வந்த விக்கிரமாதித்தியன் மற்றும் வேதாளம் மிகப் பேரறிமுகமான நாட்டுப்புறக் கதையாகும். 

இந்தக் கதையில் முருங்கை மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் வேதாளம், அதை வென்று அழிக்கச் சென்ற விக்கிரமாதித்தியனிடம் இருபத்தி ஐந்து விடுகதைகள் சொல்லி விடை கேட்கும். விக்கிரமாதித்தியன் ஒவ்வொரு கதைக்கும் சரியான விடையைச் சொல்லி விடுவார். சரியான விடையைச் சொன்னவுடன் அவரிடம் இருந்து தப்பித்துக் கொண்டு, மீண்டும் முருங்கை மரத்தில் சென்று தொங்கத் தொடங்கி விடும் வேதாளம். இருபத்தி ஐந்து கதைகளுக்கும் விடை சொல்லி வேதாளத்தை நிரந்தரமாக வென்று விடுவார் விக்கிரமாதித்தியன். 

தமிழ்நாடு, நீட் மறுப்புக்கு, தெளிவான காரணங்களை தெரிவித்து வருகின்ற போதும் கூட- விக்கிரமாதித்தியன் கதை வேதாளம் போல, ஒன்றிய அரசின் நீட்வேதாளம், மீண்டும் மீண்டும் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கல்வியில் தொங்கத் தொடங்கி விடுகிறது. 

எதிர்வரும் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு நாளை மறுநாள் சனிக் கிழமை முதல், அடுத்த வியாழக்கிழமை வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நீட் தேர்விற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சட்டமுன்வரைவை குடியரசுத்தலைவர் நிராகரித்தார்.

இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் மீண்டும் நீட் தேர்விற்கு எதிராக சட்டவரைவு நிறைவேற்றி தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து நீட் தேர்வு சட்டவரைவு மீது விரைவாக நடவடிக்கை எடுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக் கோரும் சட்டவரைவை அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில 01,ஆடியில் (ஜூலை 17) நீட் நுழைவு தேர்வு நடைபெறும் என்று ஒன்றிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,204.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.