நடிகை ஈசாரெப்பா, விமானத்தில் இருந்து குதித்து வானில் கரணமடித்த காணொளி விரும்பப்பட்டும், பகிரப்பட்டும் இணையத்தை தீயாக்கி வருகிறது. தெலுங்கு திரையுலகில் கதைத்தலைவியாக அறிமுகமாகி பின்னர் தமிழில் 'ஓய்' என்கிற படத்தில் கதைத்தலைவியாக மாறியவர் ஈசாரெப்பா. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவரது கை வசம் இரண்டு தமிழ் படங்களும் உள்ளன. நடிகை ஈசாரெப்பா தனது கோடை விடுமுறையை துபாயில் கொண்டாடி வருகிறார். அங்கே அவர் விமானத்தில் இருந்து குதித்து செய்த வானக்கரணக் காணொளி இணையத்தில் தீயாகி வருகிறது.
15,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ் மற்றும தெலுங்கு என படங்களில் வேலையாக நடித்து வரும் நடிகை விமானத்தில் இருந்து குதித்த காணொளி சமூக வலைத்தளத்தில் மிகுதியாக விரும்பப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,203.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



