ஒட்டுமொத்த இந்தியாவும் நாவலந்தேயம் என்கிற தலைப்பில், தமிழினத்திற்கு சொந்தமாக இருந்த ஆண்டுகள் பல்லாயிரம். பிராமண வருகைக்குப் பின்பு, பேரளவு பிராமணிய மலைப்பில் தமிழினத்தில் பற்பல குழுக்கள் புதுப்புதுமொழிகளை உருவாக்கிக் கொண்டு புத்தினங்களாக பிரிய நாவலந்தேயம் பலநூறு குறுநிலங்களாகக் மாறியிருந்தது. ஆங்கிலேயர் வணிக வருகைக்கு முந்தைய சில ஆயிரம் ஆண்டுகள். ஆங்கிலேயர் நம்மை ஆண்டது சிலநூறு ஆண்டுகள். ஆங்கிலேயரை நாம் அகற்றிய போது, அவர்கள் நமக்குக் கொடுத்தது இன்டிபென்டன்ட் என்று, இனி நீங்கள் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்கிற ஆங்கிலத் தலைப்பு. வடஇந்தியர்கள் அந்த நாளை ஒவ்வொரு ஆண்டும், சுதந்திரதினம் என்று, தங்கள் இனம் உருவாகக் காரணமான தங்கள் மலைப்புமொழியான, சமஸ்கிருதத்திற்குவந்தது சரி. நாமும் நம்முடைய மொழியான தமிழுக்கு வருவற்கு இன்றைய நாளை கொண்டாடுவதற்கு இன்றைய நாளுக்கு நாம் வைக்க வேண்டிய தலைப்பு: விடுதலை நாள். இன்றைய நாளுக்குப் படங்களும் பொன்மொழிகளும் மீம்ஸ் மற்றும் கொட்டேசன்) சுதந்திர தினம் என்றே கிடைக்கிறது என்பதற்காக, அதை அப்படியே படியெடுத்து ஒட்டுவது- ஆகவே இன்றைய நாள், 'சுதந்திர தினம்' என்கிற சமஸ்கிருத தலைப்பைக் கொண்டாடுகிறவர்களுக்கு மட்டுமானது அல்ல, நமக்கும் ஆனது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, இன்றைய நாளுக்குப் பெருமை சேர்க்க, நாமே படங்களையும் பொன் மொழிகளையும் உருவாக்கி வெளியிடுவோம். இந்தத் தொடக்கம், ஒன்றியத்தில் நமக்கும் முழு அதிகாரம் என்று, ஒன்றிய ஆட்சிக்கு நாமும் முனைவதற்கான கால்கோள் ஆகும். 30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5127: -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,437.
இன்றைய நாளுக்கு,
நான் என்கிற எனக்கு,
நான் உருவாக்கிக் கொண்ட என் குடும்பத்திற்கு,
நான் வாழும் ஊருக்கு,
நிலைத்த வாழ்க்கைக்கு, குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று ஐவகை நிலங்களில், தோன்றியது முதல் தொடர்ந்து வாழும் என் மண்ணுக்கு,
என் மண்ணின் அடையாளமும், என்னின் அடையாளமும் ஆன என் மண்ணின், என்னின், முதல் உடைமையுமான தமிழுக்கு பெருமை சேர்க்கிற பாடு ஆகாது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.