Show all

இந்தியாவின் மூன்றாவது பெரிய பணக்காராக இடம்பற்றும் தமிழர் சிவநாடார்!

இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களில் தமிழர் சிவநாடார் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். ஆனாலும்கூட முதல் பணக்காரருக்கும் இவருக்குமான இடைவெளி கொஞ்சம் அதிகமே.

24,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவின் முதல் பத்து  பணக்காரர்கள் பட்டியலில் தமிழர் சிவநாடார் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். 
   
இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்திலும், அதானி இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

நடப்பு ஆண்டுக்கான  உலக  பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் வணிக இதழ் வெளியிட்டு உள்ளது. இதில், தமிழர் சிவநாடார் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். முகேஷ் அம்பானி முதலிடத்திலும், அதானி இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

அமேசான் தேடலில தமிழ், தமிழ்ப் புத்தகப்பதிப்பில் அமேசான் கிண்டில் என்று தமிழை தம் வணிகத்தில் முன்னெடுத்துக் கொண்டாடும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இரண்டாம் இடத்தில் உள்ளார். உலக பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். ஆளும் பாஜக தூக்கிப்பிடிப்பதாக தகவல் அறியப்பட்டு வரும், முகேஷ் அம்பானி பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

உலக அளவில் பணக்காரர்கள்  அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் முதல் 10  பணக்காரர்கள் பட்டியல் வருமாறு:
3. எச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் - சொத்து மதிப்பு 28.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

2. அதானி குழும நிறுவனர் கவுதம் அதானி - சொத்து மதிப்பு 90 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

1. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி - சொத்து மதிப்பு 90.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

4. சீரம் இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குனர் சைரஸ் பூனவல்லா - சொத்து மதிப்பு 24.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

5. டி-மார்ட் நிறுவனர் ராதாகிஷன் தமானி - சொத்து மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

6. ஆர்சிலர் மிட்டல் நிறுவன தலைவர் லட்சுமி மிட்டல் - சொத்து மதிப்பு 17.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

7. ஓ.பி.ஜிண்டால் குழும தலைவர் சாவித்திரி ஜிண்டால் - சொத்து மதிப்பு 17.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

8. ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா  -சொத்து மதிப்பு 16.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

9. சன் பார்மா நிறுவனர் திலீப் சாங்க்வி - சொத்து மதிப்பு 15.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

10. கோட்டாக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் உதய் கோட்டாக் -சொத்து மதிப்பு 14.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 

நாம் அடிக்கடி உலகப்பெரும்பணக்காரர்கள் பற்றி பேசுவது புலம்பல் வகைக்கானது அன்று. உலகப்பட்டியலில் சிவநாடர் போல தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறைய பெரும்பணக்காரர்கள் இடம்பெற வேண்டும் என்கிற ஆசையும் கனவும் பற்றிதாகும். பொருள் ஈட்டுவது குற்றச்செயல் அல்ல. அதை குற்றமாக்குகிற எந்த நாட்டு அரசும்- அதில் தனக்கு வரியாக பங்கு தரவில்லை என்கிற குற்றசாட்டை- 'சொத்துக் குவிப்பு' என்கிற பொய்யான தலைப்பில் அடையாளப்படுத்துகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,211.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.