Show all

தமிழ்நாடு ஆளுநர் உரை! திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழாவில்

உலகை இந்தியா வழிநடத்த உதவும் வகைக்கு புதிய இந்தியாவை உருவாக்கும் தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ஸ்வச் பாரத், சம்ருத்த பாரத், ஆத்ம நிர்பார் பாரத், ஜல் ஜீவன் மிஷன், ஜன்தன் யோஜனா, மேம்படுத்தப்பட்ட எம்எஸ்பி, என்பதாகப் பல்வேறு திட்டங்கள் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளாகும். என்று பேசினார்.

23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து மாணவ- மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

நாட்டின் சுதந்திரத்துக்காக எண்ணிலடங்காதோர் பல்வேறு வகைகளில் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அவர்கள் சந்தித்த இன்னல்கள், கொடுமைகள் சொல்லில் அடங்காதவை. பலர் கொலை செய்யப்பட்டனர். அவர்களில் பலர் தற்போது வரையிலும்கூட அடையாளம் காணப்படவில்லை என்பது விரும்பத்தகாதது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் இதுகுறித்த ஓர் ஆய்வை நடத்தி, நம் நாட்டுக்கு அவர்களது பங்களிப்பின் விவரங்களை அழியாத வகையில் பதிவு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

தியாகிகளையும், மாவீரர்களையும் மறக்கும் தேசம் நன்றி கெட்டதுடன் மட்டுமின்றி, இருண்ட எதிர்காலத்தை கொண்டுள்ளது என்றும் கூறலாம்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் அதன் 80-க்கும் அதிகமான மையங்கள் மற்றும் 160-க்கும் அதிகமான இணைப்புக் கல்லூரிகள் மூலம் தமிழ்நாட்டின் உயர் கல்வித் தேவைகளை நிறைவு செய்கிறது. இதன்மூலம் ஆண்டுதோறும் ஏறத்தாழ மாணவர்கள் 2.80 லட்சம் பேர் பல்வேறு கற்றல் திட்டங்களைத் தொடர்கின்றனர்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் பல்வேறு சிறப்புத் துறைகளைக் கொண்டு கற்பித்தல் பணியுடன், ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. பேராசிரியர்கள் பலரும் பல்வேறு விருதுகளை பெற்றவர்கள். என்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சிறப்புகளை பட்டியல் இட்டது பாராட்டிற்குரியது.

அவர் தொடர்ந்து பேசியபோது, புதிய இந்தியாவை உருவாக்கும் வகைக்கு தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது, உலகை இந்தியா வழிநடத்த உதவும். 

தேசிய கல்விக் கொள்கை 2020-ல் கல்வியை உள்ளடக்கிய மற்றும் நவீனமாகவும் மாற்றுவதற்கு பிரதமரால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களில் ப்ரேர்னா திட்டம், ஸ்டார்ட் அப்களை அமைப்பதற்கான சம்ரித்தித் திட்டம், மாணவர்கள் வெளிநாட்டில் படிப்பதற்கு வழங்கப்படும் எஸ்எஸ்பிசிஏ திட்டம், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளன.

இவை தவிர ஸ்வச் பாரத், சம்ருத்த பாரத், ஆத்ம நிர்பார் பாரத், ஜல் ஜீவன் மிஷன், ஜன்தன் யோஜனா, மேம்படுத்தப்பட்ட எம்எஸ்பி, என்பதாகப் பல்வேறு திட்டங்கள் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளாகும். என்று பேசினார்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக இணை வேந்தரும், உயர் கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி, புதுடெல்லி இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் (பொறுப்பு) ப.கனகசபாபதி ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை செயலர் டி.கார்த்திகேயன் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.செல்வம் வரவேற்றார். பல்கலைக்கழகப் பதிவாளர் க.கோபிநாத் நன்றி கூறினார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,092.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.