Show all

தமிழ்நாடு என்றாலே கெத்துதானே! அதிக பணம் வழங்கும் இயந்திரங்களைத் தமிழ்நாடே கொண்டுள்ளதாக கட்டுப்பாட்டு வங்கி தகவல்

இந்தியாவில் அதிக பணம்வழங்கும் இயந்திரங்கள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்து கெத்து காட்டியுள்ள தகவல், இந்தியக் கட்டுபாட்டு வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

09,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: கடந்த ஆண்டு இறுதியில்  எடுத்த கணக்கின் படி இந்தியாவிலேயே அதிகப்படியான பணம்வழங்கும் இயந்திரங்கள் (ஏடிஎம்) இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இது இந்தியக் கட்டுபாட்டு வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் ஆகும்.

தமிழ்நாட்டில் தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கி, வொயிட் லேபிள் பணம் வழங்கும் இயந்திர நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து மொத்தம் 28,540 பணம்வழங்கும் இயந்திரங்களை நிறுவியுள்ளது. மேலும் அனைத்தும் பயன்பாட்டில் உள்ளது. 

அதிக பணம்வழங்கும் இயந்திரங்கள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்த நிலையில் 2வது இடத்தை இந்தியாவின் வணிகத் தலைநகரம் எனப் பெருமையுடன் விளங்கும் மகாராஷ்டிரா பெற்று உள்ளது. மகாராஷ்டிராவில் 27,945 பணம்வழங்கும் இயந்திரங்களும், உத்தரப் பிரதேசத்தில் 23,640 பணம்வழங்கும் இயந்திரங்களுடன் 2வது மற்றும் 3வது இடத்தைப் பிடித்துள்ளன.   

தமிழ்நாட்டில் பொதுத்துறை வங்கிகள் மட்டும் சுமார் 13,089 பணம்வழங்கும் இயந்திரங்களை வைத்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவில் 1,39,002 பணம்வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ள நிலையில்- கிட்டதட்ட 10 விழுக்காட்டு  பணம்வழங்கும் இயந்திரங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. 
பரோடா வங்கி - 568 
பேங்க் ஆப் இந்தியா - 251 
மகாராஷ்டிரா வங்கி - 30 
கனரா வங்கி - 2220 
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா - 115 
இந்தியன் வங்கி - 1889 
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 1451 
பஞ்சாப் மற்றும் சிண்ட் வங்கி - 14 
பஞ்சாப் ஒன்றிய வங்கி - 362 
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா - 5273 
யூகோ வங்கி - 89 
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா - 827 

தனியார் வங்கிகள் சுமார் 10,331 பணம்வழங்கும் இயந்திரங்களை வைத்துள்ளது. மொத்தமாக இந்தியாவில் 74,748 பணம்வழங்கும் இயந்திரங்கள் உள்ளன. 
ஆக்சிஸ் பேங்க் லிமிடெட் - 1779 
பந்தன் வங்கி லிமிடெட் - 18 
சிட்டி யூனியன் வங்கி லிமிடெட் - 1311 
சிஎஸ்பி வங்கி லிமிடெட் - 93 
டிசிபி வங்கி லிமிடெட் - 12 
தனலக்ஷ்மி வங்கி லிமிடெட் - 37 
பெடரல் வங்கி லிமிடெட் - 179 
எச்டிஎப்சி வங்கி லிமிடெட். - 1545 
ஐசிஐசிஐ வங்கி லிமிடெட் - 1888 
ஐடிபிஐ வங்கி லிமிடெட் - 231 
ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க் லிமிடெட் - 50 
இண்டூசிண்ட் வங்கி லிமிடெட் - 233 
ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கி லிமிடெட் - 5 
கர்நாடகா வங்கி லிமிடெட் - 63 
கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட் - 1497 
கோடக் மஹிந்திரா வங்கி லிமிடெட். - 154 
ஆர்பிஎல் வங்கி லிமிடெட் - 33 
சவுத் இந்தியன் வங்கி லிமிடெட் - 209 
மெர்கண்டைல் வங்கி லிமிடெட் - 948 
யெஸ் பேங்க் லிமிடெட். - 46 

இந்தியாவில் இயங்கி வரும் வெளிநாட்டு வங்கிகள் தமிழ்நாட்டில் சுமார் 653 பணம் வழங்கும் இயந்திரங்களை வைத்துள்ளது. வெளிநாட்டு வங்கிகள் மொத்தமாகவே இந்தியாவில் 1795 பணம்வழங்கும் இயந்திரங்களை மட்டுமே வைத்துள்ள போதும்கூட என்பது குறிப்பிடத்தக்கது. 
சிட்டிபேங்க் என்.ஏ - 41 
டிபிஎஸ் வங்கி இந்தியா லிமிடெட் - 582 
டியுட்சி பேங்க் ஏஜி - 3 
தோஹா வங்கி – 1
எச்எஸ்பி வங்கி லிமிடெட் - 8 
கேப் ஹனா வங்கி - 1 
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி' - 17 

நிதி நிறுவனப் பிரிவில் இருக்கும் வங்கிகள் தமிழ்நாட்டில் 261 பணம் வழங்கும் இயந்திரங்களை வைத்துள்ளது. 
ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி லிமிடெட் - 119 நுளுயுகு ஸ்மால் பைனான்ஸ் வங்கி லிமிடெட் - 46 
பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் லிமிடெட் - 26 
ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி லிமிடெட் - 7 
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் லிமிடெட் - 61 
உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் லிமிடெட் - 2 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,196.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.