Show all

பிஎஸ்என்எல்லில் கிடைக்கிறது! தற்போது ரூ107க்கு 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம்

தற்போது ரூ107க்கு 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம் பிஎஸ்என்எல்லில் கிடைக்கிறது என்கிற செய்தி பிஎஸ்என்எல்லின் தொலைத்தொடர்பு இணைப்பை பயன்படுத்துகிறவர்களுக்கு இனிக்கும் என்று நம்பலாம். 

16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ரூ500க்குள் 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம்! தரவு அதிகம் பயன்படுத்தாதவர்களுக்கு- ஏர்டெல், ஐடியா, ஜியோவில் என்று கடந்த கிழமை நாம் வெளியிட்டிருந்த செய்திக்கு எதிர்பார்த்ததைவிட அதிகமே வரவேற்பு கிடைத்திருந்தது.

தற்போது ரூ107க்கு 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம் பிஎஸ்என்எல்லில் கிடைக்கிறது என்கிற செய்தி பிஎஸ்என்எல்லின் தொலைத்தொடர்பு இணைப்பை பயன்படுத்துகிறவர்களுக்கு இனிக்கும் என்று நம்பலாம். 

ஆனால் இந்தத் திட்டம் தரவு அதிகம் பயன்படுத்தாதவர்களுக்கு மட்டுமானது அல்ல. இத்திட்டம் அழைப்பையும் அதிகம் முன்னெடுக்காதவர்களுக்கானதாகும். ஆம் இந்த 84 நாட்களுக்கு திட்டத்தில், எல்லையில்லாத அழைப்பெல்லாம் கிடைக்காது. வெறுமனே நூறு நிமிட அழைப்பு மட்டுமே கிடைக்கும்.

ரூ,107 விலையில் கிடைக்கும் 84 நாட்கள் செல்லுபடி காலத்தில் 100 நிமிடங்களுக்கான அழைப்பும், மூன்று ஜிபி தரவும் கிடைக்கும். இந்த மீள்நிரப்பில் 60 நாட்களுக்கு இலவச பிஎஸ்என்எல்லின் அழைப்பிசையையும் பெற்றிட முடியும். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,114.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.