Show all

ஒன்றிய பாஜக அரசு முன்னெடுக்கும் பயணப்பாதை! இலங்கை கடந்து வந்த பாதை எதுவே, அதுவாகவே இருக்கிறது: இராகுல்காந்தி

இலங்கையின் இன்;றைய வீழ்ச்சி நிலைக்கு, இலங்கை கடந்து வந்த பாதை எதுவே, அதுவாகவே இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு முன்னெடுக்கும் இந்தியாவின் பயணப்பாதை என்று படம் வரைந்து விளக்கி அசத்தியுள்ளார் இராகுல்காந்தி.

05,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையுடன், இந்தியாவை ஒப்பீடு செய்யும் வரைபடங்களை இராகுல்காந்தி பகிர்ந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல்காந்தி, பொருளாதார சரிவு தொடர்பாக இலங்கையுடன் இந்தியாவை ஒப்பிடும் ஆறு வரைபடங்களை வெளியிட்டு ஒன்றிய பாஜக அரசை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக தமது கீச்சுப் பதிவில், இந்தியாவிலும் இலங்கையிலும், வேலையில்லாத் திண்டாட்டம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் வகுப்புவாத வன்முறைகள் ஒரே மாதிரியாக உள்ளன என்றும், மக்களை திசை திருப்புவதன் மூலம் உண்மைகள் மாறாது, இந்தியா இலங்கை வழியில் செல்வது போல் தெரிகிறது என்றும் கூறியுள்ளார் இராகுல்காந்தி.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,253.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.