Show all

நடுகல் மாதிரியான பனி உறைவை கொண்டாடும் வட இந்திய மக்கள்!

இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் நடுகல் மாதிரியான பனி உறைவு கட்டாயம் தோன்றுகிறது. 
 
15,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் நடுகல் மாதிரியான பனி உறைவு கட்டாயம் தோன்றுகிறது. இந்த காட்சியைப் பார்க்க வட இந்தியாவில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் உலா சென்று வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான  அமர்நாத் உலா  தொடங்குவது குறித்து அமர்நாத் கோவில் வாரிய குழு ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையிலான குழு நேற்று விவாதித்தது. இதில் அமர்நாத் நடுகல் மாதிரியான பனி உறைவு காட்சி உலாவை 16,ஆனியில் (ஜூன்30) தொடங்குவது என முடிவு எடுக்கப்பட்டது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,202. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.